ரஜினி பேரவை என்ற பெயரில் இணைய தளம்

ரஜினி பேரவை என்ற பெயரில் இணைய தளம்
ரஜினி பேரவை என்ற பெயரில் இணைய தளம்


ரஜினிகாந்த் அரசியலில் நுழைவதற்கான தொடக்கமாக, ரஜினி பேரவை என்ற பெயரில் இணைய தளத்தை அவரது ஆதரவாளர்கள் தொடங்கியுள்ளனர். 

ரஜினி பேரவை (www.rajiniperavai.org)என்ற பெயரில் அவரது ஆதரவாளர்கள் இணையதளத்தை தொடங்கியுள்ளனர். இதில் சமூக மாற்றத்தை விரும்புவோர் பதிவு செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பெயர், மின்னஞ்சல், தொலைபேசி எண் ஆகிய சுயவிவரங்களைப் பதிவிட்டால், ஒருமுறை ரகசியக் குறியீடு தொலைபேசி எண்ணுக்கு வரும். அதைப் பதிவிட்டு ரஜினி பேரவையில் உறுப்பினராகலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதே பெயரில் ஆண்ட்ராய்டு இயங்குதளத்திலான செல்ஃபோன் ஆப் உருவாக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com