\
ரஜினி, கமல் செய்தது என்ன? அமைச்சர் செல்லூர் ராஜு கேள்வி

ரஜினி, கமல் செய்தது என்ன? அமைச்சர் செல்லூர் ராஜு கேள்வி

ரஜினி, கமல் செய்தது என்ன? அமைச்சர் செல்லூர் ராஜு கேள்வி
Published on: 

மக்கள் துன்பப்படும்போது ரஜினி, கமல் ஆகியோர் என்ன உதவி செய்தார்கள் என்று அமைச்சர் செல்லூர் ராஜு கேள்வி எழுப்பினார்.

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் இன்று காலை அமைச்சர் செல்லூர் ராஜு குடும்பத்தினருடன் சாமி தரிசனம் செய்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ரஜினி, கமல் உள்ளிட்ட நடிகர்கள் யார் வேண்டுமானாலும் அரசியலுக்கு வரலாம் என்றும் ஆனால் மக்களுக்கு அவர்கள் மீது நம்பிக்கை இருக்க வேண்டும் என்றும் தெரிவித்தார். மேலும், எம்.ஜி.ஆரை பார்த்து அரசியலுக்கு வந்த நடிகர்கள் சிவாஜி, பாக்யராஜ், டி.ராஜேந்தர் உள்ளிட்டவர்களின் நிலை என்ன என்பதை ரஜினி, கமல் ஆகியோர் அறியாதவர்கள் அல்‌ல என்று கூறினார்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com