“விசில் அடிக்கணும்; கல்லை விட்டு எறியணும்.. அவரே அதிமுககாரர்” - ராஜேந்திர பாலாஜி

“விசில் அடிக்கணும்; கல்லை விட்டு எறியணும்.. அவரே அதிமுககாரர்” - ராஜேந்திர பாலாஜி

“விசில் அடிக்கணும்; கல்லை விட்டு எறியணும்.. அவரே அதிமுககாரர்” - ராஜேந்திர பாலாஜி
Published on

 அதிமுகவினர் யாரும் காந்தி கையை பிடித்து வந்தவர்கள் கிடையாது என அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தெரிவித்துள்ளார்.

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் ஒன்றியம் சுந்தரபாண்டியம் பேரூராட்சியில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 72வது பிறந்த நாள் விழா பொதுக்கூட்டம் சட்டமன்ற உறுப்பினர் சந்திர பிரபா தலைமையில் நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பேசும்போது,

“ஜெயலலிதாவிற்கு 72 வயது, எம்.ஜிஆருக்கு 103 வயது என்று சொன்னால் நம்ப முடிகிறதா? நாம் பார்த்தது எல்லாம் அடிமைப்பெண் எம்.ஜி.ஆர்தான். அவர் இறக்கும் வரை அப்படியேதான் இருந்தார். வயதான தோற்றத்தில் அவரை காணவில்லை.

ஜெயலலிதா உடல்நிலை சரியில்லாமல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு விதிவசத்தால் இறந்து விட்டார். திமுக தலைவர் ஸ்டாலின் மதக்கலவரத்தை தூண்டி ஆட்சியை பிடிக்கப் பார்க்கிறார். சிஏஏவால் இஸ்லாமியர்கள் தமிழகத்தில் யாரேனும் பாதிக்கப்பட்டுள்ளார்களா என முதலமைச்சர் சட்டப்பேரவையில் கேட்டதற்கு ஸ்டாலின் பதில் கூறாமல் வெளிநடப்பு செய்கிறார்.

பேச வேண்டிய இடம் சட்டப்பேரவையா? சட்டப்பேரவைக்கு வெளியேவா? அதிமுகவினர் யாரும் காந்தி கையை பிடித்து வந்தவர்கள் கிடையாது. எம்.ஜி.ஆர் வழியில் வந்தவர்கள். கூட்டத்தில் சவுண்டு கொடுக்கணும், விசில் அடிக்கணும், யாராவது ஓவரா பேசுனா கல்லை விட்டு எறியணும். அவர்தான் அதிமுககாரர். காங்கிரஸ்காரர்தான் அமைதியாக கைகட்டி உட்கார்ந்து இருப்பார்கள்.

மதக்கலவரம் செய்பவர்களை இரும்புக்கரம் கொண்டு அடக்க வேண்டும் என ரஜினியே கூறியிருக்கிறார். அதைத்தான் நாங்களும் சொல்கிறோம். முதல்வரும் அதற்கு தயாராகத்தான் இருக்கிறார்” எனத் தெரிவித்தார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com