பிரதமர் மோடி இருக்கும் வரை நம்மை யாரும் மிரட்ட முடியாது: அமைச்சர் ராஜேந்திர பாலாஜி

பிரதமர் மோடி இருக்கும் வரை நம்மை யாரும் மிரட்ட முடியாது: அமைச்சர் ராஜேந்திர பாலாஜி

பிரதமர் மோடி இருக்கும் வரை நம்மை யாரும் மிரட்ட முடியாது: அமைச்சர் ராஜேந்திர பாலாஜி
Published on

பிரதமர் மோடி இருக்கும் வரை நம்மை யாரும் மிரட்ட முடியாது என்று பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கூறியுள்ளார்.

ஜெயலலிதா மறைவிற்கு பிறகு அதிமுக இரு அணிகளாக பிரிந்து செயல்பட்டன. ஆர்.கே.நகர் இடைத்தேர்தலின் போதும் இரு அணிகள் சார்பில் தனித்தனியாக வேட்பாளர்கள் நிறுத்தப்பட்டனர். நீண்ட நாட்களாக நீடித்த இந்தப் பிரச்சனை முடிவுக்கு வந்து பன்னீர்செல்வத்துக்கு துணை முதல்வர் பதவி வழங்கப்பட்டது. 

இரு அணிகளிடையே பிரச்சனை நிலவி வந்த காலத்தில் இருதரப்பினரும் பிரதமர் மோடியை தனித்தனியே சந்தித்து பேசி வந்தனர். இரு அணிகளுக்கு இடையே இணக்கம் ஏற்பட பிரதமர் மோடியும் அறிவுரைகள் கூறியதாக பேசப்பட்டது. மேலும், தமிழகத்தில் தற்போது ஆளும் கட்சியாக உள்ள அதிமுகவை பிரதமர் நரேந்திர மோடி பின்னால் இருந்து இயக்குவதாக திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் விமர்சித்து வருகின்றன. 

இந்த நிலையில், பிரதமர் மோடி இருக்கும் வரை யாரும் மிரட்ட முடியாது என்று அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கூறியுள்ளார். மேலும், “நமக்கு எந்தப் பிரச்னை ஏற்பட்டாலும் அதை தீர்த்துவைக்க பிரதமர் மோடி இருக்கிறார். இரட்டை இலை யாருக்கு கிடைக்கிறதோ அதுதான் உண்மையான அதிமுக. திமுகவுக்கு ஆதரவாக அதிமுகவில் 40 ஸ்லீப்பர் செல் எம்எல்ஏக்கள் உள்ளனர்” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com