அமித்ஷாவின் அறையில்தான் பகுஜன் சமாஜ் வேட்பாளர்களை முடிவு செய்கிறார்கள்: எஸ்பிஎஸ்பி தலைவர்

அமித்ஷாவின் அறையில்தான் பகுஜன் சமாஜ் வேட்பாளர்களை முடிவு செய்கிறார்கள்: எஸ்பிஎஸ்பி தலைவர்
அமித்ஷாவின் அறையில்தான் பகுஜன் சமாஜ் வேட்பாளர்களை முடிவு செய்கிறார்கள்:  எஸ்பிஎஸ்பி தலைவர்

உத்தரப்பிரதேச சட்டப்பேரவை தேர்தலில் மாயாவதி பாஜகவுக்கு உதவி செய்கிறார், அமித்ஷாவின் அறையில்தான் பகுஜன் சமாஜ் கட்சி வேட்பாளர்கள் முடிவு செய்யப்பட்டனர் என்று எஸ்பிஎஸ்பி தலைவர் ஓம் பிரகாஷ் ராஜ்பர் குற்றம் சாட்டியுள்ளார்.

இது தொடர்பாக பேசிய சுஹேல் தேவ் பாரதிய சமாஜ் பார்ட்டியின் தலைவர் ஓம் பிரகாஷ் ராஜ்பர், "பாஜக தலைவர் அமித்ஷாவின் அறையில் பகுஜன் சமாஜ் கட்சி வேட்பாளர்கள் இறுதி செய்யப்பட்டனர். ஆளும் பாஜகவை வெற்றிபெற வைக்கவே மாயாவதியின் அணி தேர்தலில் போட்டியிடுகிறது.

2022 உ.பி தேர்தலில் காங்கிரஸ், பிஎஸ்பி போன்ற கட்சிகளை வாக்காளர்கள் கவனிக்கவே இல்லை, பாஜகவை ஆட்சியில் இருந்து அகற்ற சமாஜ்வாதி கட்சி, ராஷ்ட்ரிய லோக் தளம், எஸ்பிஎஸ்பி கூட்டணி கட்சிகள் மீது மக்கள் நம்பிக்கை வைத்துள்ளனர். பாஜக வெறுப்பை மட்டுமே பரப்புகிறது, மக்கள் எப்படி கல்வி மற்றும் வேலைவாய்ப்பைப் பெறுவார்கள் என்பது பற்றி கவலைப்படுவதில்லை. அனைத்து மண்டலங்களிலும், மாநில மக்கள் மாற்றத்தை விரும்புகிறார்கள், " என்று கூறினார்.

உ.பி தேர்தலில் சமாஜ்வாதி கட்சியுடன் கூட்டணி அமைத்து எஸ்பிஎஸ்பி கட்சி 18 சட்டமன்ற தொகுதிகளில் போட்டியிடுகிறது, உத்தரபிரதேச தேர்தல் முடிவுகள் மார்ச் 10 தேதி வெளியாகிறது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com