\
துபே, தெவாட்டியா அதிரடி! பெங்களூர் அணிக்கு 178 ரன்கள் இலக்கு நிர்ணயித்தது ராஜஸ்தான்!

துபே, தெவாட்டியா அதிரடி! பெங்களூர் அணிக்கு 178 ரன்கள் இலக்கு நிர்ணயித்தது ராஜஸ்தான்!

துபே, தெவாட்டியா அதிரடி! பெங்களூர் அணிக்கு 178 ரன்கள் இலக்கு நிர்ணயித்தது ராஜஸ்தான்!
Published on

ஷிவம் துபே, தெவாட்டியா அதிரடி! பெங்களூர் அணிக்கு 178 ரன்கள் இலக்கு நிர்ணயித்தது ராஜஸ்தான்!

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் நடப்பு ஐபிஎல் சீசனில் 16வது லீக் போட்டியில் விளையாடி வருகின்றன. மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்று வரும் இந்த போட்டியில் டாஸ் வென்ற பெங்களூர் அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. அதனால் ராஜஸ்தான் அணி முதலில் பேட் செய்தது. 

ஜாஸ் பட்லர் மற்றும் மணன் வோஹ்ரா ராஜஸ்தான் அணிக்காக தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். சிராஜ் வீசிய மூன்றாவது ஓவரில் வெறும் 8 ரன்களுக்கு கிளீன் போல்ட்டாகி இருந்தார் பட்லர். ஜேமிசன் வீசிய அதற்கடுத்த ஓவரில் மணன் வோஹ்ராவும் நடையை கட்டினார். சிராஜ் அடுத்த ஓவரில் மில்லாரும் LBW முறையில் விக்கெட்டை இழந்தார். பவர் பிளேயில் மட்டும் மூன்று விக்கெட்டுகளை இழந்தது ராஜஸ்தான். 

வாஷிங்டன் வீசிய எட்டாவது ஓவரில் கேப்டன் சஞ்சு சாம்சன் வெளியேறினார். 43 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்திருந்தது ராஜஸ்தான். பின்னர் தூபேவும், ரியான் பராக்கும் 66 ரன்களுக்கு பார்ட்னர்ஷிப் அமைத்தனர். பராக் 16 பந்துகளில் 25 ரன்கள் குவித்து ஹர்ஷல் பட்டேலிடம் விக்கெட்டை இழந்தார். தொடர்ந்து தூபேவும் 46 ரன்களுக்கு ரிச்சர்சன்னிடம் விக்கெட்டை பறிகொடுத்தார். 

மறுபக்கம் ராகுல் தெவாட்டியா அதிரடியாக விளையாடினார். 23 பந்துகளில் 40 ரன்களை குவித்து சிராஜ் வேகத்தில் வீழ்ந்தார். அவருக்கு மோரிஸ் ஒத்துழைப்பு கொடுத்தார். இருப்பினும் மோரிஸும் கடைசி ஓவரின் முதல் பந்தில் 10 ரன்களுக்கு ஹர்ஷல் பட்டேலிடம் சிக்கினார். அடுத்த பந்தில் சக்காரியாவும் டக் அவுட்டானார். முடிவில் 20 ஓவர்களில் 9 விக்கெட் இழப்பிற்கு 177 ரன்களை குவித்தது ராஜஸ்தான். அதன் மூலம் பெங்களூர் அணிக்கு 178 ரன்கள் இலக்கு நிர்ணயித்துள்ளது அந்த அணி. பெங்களூர் அணி தரப்பில் முகமது சிராஜ், ஹர்ஷல் பட்டேல் தலா 3 விக்கெட் சாய்த்தனர்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com