முன்னாள் அமைச்சர்கள் உட்பட 11 பேர் பாஜகவில் இருந்து நீக்கம் - வசுந்தரா ராஜே அதிரடி

முன்னாள் அமைச்சர்கள் உட்பட 11 பேர் பாஜகவில் இருந்து நீக்கம் - வசுந்தரா ராஜே அதிரடி

முன்னாள் அமைச்சர்கள் உட்பட 11 பேர் பாஜகவில் இருந்து நீக்கம் - வசுந்தரா ராஜே அதிரடி
Published on

ராஜஸ்தானில் சட்டசபை தேர்தல் நெருங்கிவிட்ட நிலையில், முன்னாள் அமைச்சர்கள் உட்பட 11 மூத்த தலைவர்களை பாஜகவில் இருந்து நீக்கி வசுந்தரா ராஜே நடவடிக்கை எடுத்துள்ளார். 

ராஜஸ்தான் மாநிலத்தில் டிசம்பர் மாதம் 7ஆம் தேதி சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது. அதைத் தொடர்ந்து, மற்ற நான்கு மாநிலங்களுடன்  ராஜஸ்தானுக்கும் சேர்த்து டிசம்பர் 11 ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது. 200 தொகுதிகளைக் கொண்ட அந்த மாநிலத்தில் மீண்டும் ஆட்சியை பிடிக்க ஆளும் பாஜகவுக்கும், காங்கிரஸ் கட்சிக்கும் இடையே கடும் போட்டி நிலவி வருகிறது.

கருத்துக்கணிப்புக்கள் காங்கிரஸ் கட்சிக்கு சாதகமாக வெளியாகியுள்ள நிலையில், மீண்டும் ஆட்சியை தக்க வைக்க பாஜக கட்சி தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறது. இதில், வேட்பாளர்கள் பட்டியல் அறிவிக்க தொடங்கியது முதலே காங்கிரஸ் மற்றும் பாஜக இருகட்சிகளிலும் நிறைய அதிருப்திகள் வெளிப்பட்டன. நிறைய பேர் தங்கள் கட்சிகளுக்கு எதிராக போர்கொடி தூக்கினர். வேட்பு மனுக்களை திரும்ப பெறுவதற்காக கடைசி தேதி நேற்றுடன் முடிவடைந்தது. இதில், சில வேட்பாளர்களை தங்களது மனுக்களை திரும்ப பெறுமாறு முதலமைச்சர் வசுந்தரா ராஜே கூறியுள்ளார். ஆனால், அவர்கள் தங்கள் வேட்பு மனுக்களை திரும்ப பெற மறுத்துவிட்டனர். 

இந்நிலையில், முன்னாள் அமைச்சர்கள் உட்பட 11 மூத்த தலைவர்களை பாஜகவில் இருந்து நீக்கி வசுந்தரா ராஜே நடவடிக்கை எடுத்துள்ளார். அதிருப்தியார்கள் 11 பேரும் ஆறு ஆண்டுகள் கட்சியின் அடிப்படையின் உறுப்பினர் பொறுப்பில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்கள். வாக்குப்பதிவுக்கும் இன்னும் இரண்டு வாரங்களே உள்ள நிலையில், பாஜக தலைமையின் இந்த நடவடிக்கை பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதுமட்டுமல்லாமல் மேலும் சில அதிருப்தியாளர்கள் இந்தத் தேர்தலில் சுயேட்சையாக வேட்பு மனு தாக்கல் செய்துள்ளார்கள். பாஜக எம்.எல்.ஏவாக இருந்த மன்வீந்தரா சிங், காங்கிரஸ் கட்சி வேட்பாளராக மாறியுள்ளார். வசுந்தரா ராஜே தலைமையிலான ஆளும் பாஜக அரசுக்கு எதிராக கடுமையான எதிர்ப்பு அலை ராஜஸ்தானில் நிலவுவதாக கூறப்படுகிறது. 

அதிருப்தியாளர்கள் பிரச்னை பாஜகவுக்கும் மட்டும் அல்ல காங்கிரஸுக்கும் உள்ளது. காங்கிரஸ் கட்சியில் சுமார் 40 பேர் அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளனர். இந்த அதிருப்தியாளர்களால் காங்கிரசின் வெற்றி வாய்ப்புக்கும் சிக்கல் ஏற்படும் என்று கூறப்படுகிறது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com