\
சைவ பவனாக மாறிய ராஜ் பவன்

சைவ பவனாக மாறிய ராஜ் பவன்

சைவ பவனாக மாறிய ராஜ் பவன்
Published on: 

ஆளுநர் மாளிகைக்குள் அசைவ உணவுகளுக்கு அனுமதியில்லை என தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் அறிவித்துள்ளார்.

தமிழகத்தின் 25வது ஆளுநராக நியமிக்கப்பட்டவர் பன்வாரிலால் புரோஹித். இவர் மராத்திய மாநிலத்தை சேர்ந்தவர். கடந்த சில தினங்களாக பன்வாரிலால் அதிரடியான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். சமீபத்தில் கோவையில் மாவட்ட ஆட்சியருடன் இவர் நடத்திய ஆய்வு, அரசியலில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. குறிப்பாக அரசியல் கட்சி தலைவர்கள் பலர் ஆளுநரின் செயலுக்கு எதிர்ப்பு தெரிவித்திருந்தனர்.

இந்நிலையில் அடுத்த அதிரடியாக சென்னை கிண்டியிலுள்ள ஆளுநர் மாளிகைக்குள் அசைவ உணவிற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆளுநர் மாளிகைக்குட்பட்ட பகுதிகளில் முட்டை உட்பட அசைவ உணவுகள் சமைக்கவோ, சாப்பிடவோ கூடாது என்று உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும் அசைவ உணவுகளை விரும்புவர்கள் ஆளுநர் மாளிகைக்கு வெளியில் சென்று சாப்பிடவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
 

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com