டிரெண்டிங்
ராகுல் விரைவில் காங்கிரஸ் தலைவராவார் : சோனியா காந்தி
ராகுல் விரைவில் காங்கிரஸ் தலைவராவார் : சோனியா காந்தி
காங்கிரஸ் கட்சியின் தலைவராக விரைவில் ராகுல் காந்தி நியமிக்கப்படுவார் என அக்கட்சியின் தலைவர் சோனியா காந்தி கூறியுள்ளார்.
டெல்லியில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற சோனியா காந்தியிடம், ராகுல் காந்தி எப்போது காங்கிரஸ் தலைவராக பொறுப்பேற்பார் என்று செய்தியாளர்கள் கேட்டபோது, விரைவில் நடக்கும் என்று சோனியா காந்தி பதிலளித்தார். காங்கிரஸ் தலைவராக ராகுல் பொறுப்பேற்க வேண்டும் என அக்கட்சியின் மூத்த தலைவர்கள் பலர் கூறி வந்த நிலையில், சோனியா காந்தி இதைத் தெரிவித்திருப்பது முக்கியத்துவம் பெறுகிறது.