குறுக்கு வழியில் ஆட்சியை பிடிக்கிறது பாஜக - ராகுல் காந்தி

குறுக்கு வழியில் ஆட்சியை பிடிக்கிறது பாஜக - ராகுல் காந்தி
குறுக்கு வழியில் ஆட்சியை பிடிக்கிறது பாஜக - ராகுல் காந்தி

மேகாலயாவில் குறுக்கு வழியில் ஆட்சியை பிடிக்க பாஜக முயற்சித்து வருவதாக காங்கிரஸ் கட்சித் தலைவர் ராகுல் காந்தி குற்றஞ்சாட்டியுள்ளார்.
அண்மையில் நாகாலாந்து, திரிபுரா, மேகாலாயா மாநிலங்களுக்கான தேர்தல் நடைபெற்று முடிவுகள் வெளியானது.
இதில் திரிபுரா மாநிலத்தில் மாணிக் சர்க்கார் தலைமையிலான கம்யூனிஸ்ட் கட்சியின் ஆட்சி முடிவுக்கு வந்து, பாஜக ஆட்சியை கைப்பற்றியது. நாகலாந்தில் பாஜகவின் கூட்டணியே வெற்றிப் பெற்றது. 
மேகாலயா மாநிலத்தில் உள்ள 59 தொகுதிகளிஸ் காங்கிரஸ் கட்சி 21 இடங்களிலும், தேசிய மக்கள் கட்சி 19 இடங்களிலும், பாஜக 2 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளது. சுயேட்சை 3 இடங்களிலும், சிறிய கட்சிகள் 14 இடங்களிலும் வெற்றி பெற்றன.
ஆட்சி அமைக்க பெரும்பான்மை உறுப்பினர்கள் 31 பேர் தேவைப்படும் நிலையில் எந்தக் கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை. அதேசமயம், தனிப்பெரும் கட்சியாக காங்கிரஸ் கட்சி 21 உறுப்பினர்களுடன் உள்ளதால், ஆட்சி அமைக்க முறைப்படி ஆளுநரைச் சந்தித்து உரிமை கோரியது.
பெரும்பாலான சிறியக் கட்சி எம்.எல்.ஏக்கள் தங்கள் பக்கம் இருப்பதாக பாஜகவும், ஆளுநரிடம் உரிமை கோரியுள்ளது. இந்நிலையில் காங்கிரஸை கட்சியின் தலைவர் ராகுல் காந்தி ட்விட்டரில் பாஜகவை கடுமையாக விமர்சித்துள்ளார் அதில் " மக்கள் தீர்ப்பை மதிக்காமல்
அதிகாரத்தை பிடிக்க பாஜக குறுக்கு வழியில் முயற்சிக்கிறது. பதவியை பிடிப்பதற்காக பண பலத்தை பயன்படுத்தி சந்தர்ப்பவதாக கூட்டணியை பாஜக அமைத்துள்ளது. 2 எம்.எல். ஏக்களை மட்டுமே பெற்றுள்ள பாஜக மேகாயலாவில் அதிகாரத்தை கைப்பற்ற துடிக்கிறது. மணிப்பூரிலும், கோவாவிலும் இதே யுக்தியை பயன்படுத்திதான் பாஜக ஆட்சியை பிடித்தது" என்று கூறியுள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com