சீன தூதரை ராகுல் சந்தித்தது உண்மைதான்... காங்கிரஸ் திடீர் பல்டி

சீன தூதரை ராகுல் சந்தித்தது உண்மைதான்... காங்கிரஸ் திடீர் பல்டி

சீன தூதரை ராகுல் சந்தித்தது உண்மைதான்... காங்கிரஸ் திடீர் பல்டி
Published on

இந்தியா-சீனா இடையிலான எல்லைப்பகுதியில் பதற்றம் நிலவிவரும் நிலையில், இந்தியாவுக்கான சீன தூதர் லூவோ ஜாவோயை காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி சந்தித்தது உறுதி செய்யப்பட்டுள்ளது. 

சீன தூதரை ராகுல் சந்தித்ததாக ஊடகங்களில் காலை முதலே செய்திகள் வெளியாயின. ஆனால், போலியாக இந்த செய்திகள் பரப்பப்படுவதாக காங்கிரஸ் கட்சி குற்றம்சாட்டியது. இந்த சந்திப்பு கடந்த 8ம் தேதி நடந்ததாக சீன தூதரகத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் பதிவிடப்பட்டது. காலை 8.30 மணி வரை அந்த இணையதளத்தில் இருந்த இந்த பதிவு நீக்கப்பட்டது. இந்தியா-சீனா உறவு குறித்து அந்த சந்திப்பில் பேசப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டிருந்தது. இதனால் பாஜக உள்ளிட்ட கட்சிகள் கடும் விமர்சனங்களை முன்வைத்தன. இந்தநிலையில், சீன தூதர் - ராகுல் காந்தி இடையிலான சந்திப்பு நடந்தது உண்மைதான் என்று காங்கிரஸ் கட்சி தற்போது திடீர் பல்டி அடித்துள்ளது. இதுதொடர்பாக பேசிய காங்கிரஸ் கட்சியின் செய்தித் தொடர்பாளர் ரன்தீப் சிங் சுரேஜ்வாலா,  சீனாவுடன் தூதரகரீதியிலான உறவுகளை இந்தியா இன்னும் கொண்டிருக்கும் போது இந்த சந்திப்புகள் குறித்து கேள்வி எழுப்புவது சரியாகாது. அவருடன் பூடான் தூதரும், ஜி5 நாடுகளின் பிரதிநிதிகளும் மரியாதை நிமித்தமாக ராகுல் காந்தியை சந்தித்தனர் என்று அவர் தெரிவித்தார். சீன தூதர் - ராகுல்காந்தி சந்திப்பு குறித்து காங்கிரஸ் கட்சி முதலில் மறுத்தது ஏன் என்றும், இப்போது மாற்றிப்பேசுவது ஏன் என்று விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டுள்ளன. சிக்கிம் மாநிலத்தில் இந்தியா-பூட்டான்-சீனா எல்லைகளை இணைக்கும் இடத்தில் டோக்லாம் என்ற பகுதியில் சீனா மேற்கொண்ட சாலை கட்டமைப்பு பணிகளை இந்திய ராணுவம் தடுத்தது. இதைத்தொடர்ந்து இந்தியாவிற்கும், சீனாவிற்கும் இடையே எல்லையில் பதற்றம் ஏற்பட்டுள்ளது.  
 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com