கன்னத்தில் அறைந்தாலும் பேசமாட்டீர்களா? : டோக்லாம் குறித்து ராகுல் காந்தி கேள்வி

கன்னத்தில் அறைந்தாலும் பேசமாட்டீர்களா? : டோக்லாம் குறித்து ராகுல் காந்தி கேள்வி
கன்னத்தில் அறைந்தாலும் பேசமாட்டீர்களா? : டோக்லாம் குறித்து ராகுல் காந்தி கேள்வி

டோக்லாம் விவகாரத்தில் பிரதமர் மோடி பேசாமல் விட்டது ஏன் என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கேள்வி எழுப்பியுள்ளார். 

ராகுல் காந்தி இரண்டுநாள் பயணமாக லண்டன் சென்றுள்ளார். பயணத்தின் ஒருபகுதியாக லண்டனில் உள்ள இந்திய பத்திரிகையாளர்கள் சங்கத்தின் சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டு ராகுல் பேசினார். அப்போது, டோக்லாம் விவகாரத்தில் பிரதமர் மோடி மீது குற்றம்சாட்டினார். ராகுல் பேசுகையில், “சீன துருப்புகள் இன்னும் டோக்லாமில் உள்ளன. பிரதமர் மோடி சீனா சென்றபோது டோக்லாம் பிரச்னை குறித்து விவாதிக்கவில்லை. யாரோ ஒருவர் வந்து உங்களுடைய கன்னத்தில் அறைகிறார்கள். ஆனால் அதுகுறித்து பேச உங்களுக்கு எண்ணமில்லை” என்றார்.

அரசியல் கொள்கை குறித்து குறித்த கேள்விக்கு, “என்னுடைய அரசியல் கொள்கை என்பது இந்தியாவில் மிகவும் பழமையான ஒன்றுதான். அந்த கருத்து ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக ஆர்.எஸ்.எஸ் கொள்கைகளுக்கு எதிராக போராடி வந்துள்ளது. அதனால், என்னுடைய கொள்கை புதிதானது அல்ல” என்றார். 

யார் பிரதம வேட்பாளர் என்ற கேள்விக்கு பதில் அளிக்கையில், “முதலில் பாஜக அரசை வீழ்த்துவது ஒன்றே எல்லோருடைய இலக்காக இருக்க வேண்டும். யார் பிரதமர் என்பதை பின்னர் பார்த்துக் கொள்ளலாம்” என்றார் ராகுல். முன்னதாக, வருகின்ற மக்களவை தேர்தலில் காங்கிரஸ் தனிப்பெரும் கட்சியாக வெற்றி பெற்றால், தான் பிரதமர் ஆவதில் தவறேதும் இல்லை என்று ராகுல் காந்தி கர்நாடக தேர்தல் பிரச்சாரத்தின் போது கூறியிருந்தார். 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com