விமானம் ஒன்றில் ராகுல்காந்தி வரிசையில் நின்று ஏறும் படம் ட்விட்டரில் வெளியாகியுள்ளது.
குஜராத் பிரச்சாரத்தில் மும்முரமாக இருந்த ராகுல்காந்தி தாய் சோனியா காந்திக்கு பிறந்தாநாள் வாழ்த்து சொல்ல நேற்று காலை டெல்லி சென்றிருந்தார். பின்னர் மீண்டும் டெல்லியில் இருந்து குஜராத் தலைநகர் அகமதாபாத்திற்கு இண்டிகோ விமானம் மூலம் திரும்பியுள்ளார்.
இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தில் ராகுல் காந்தி வரிசையில் நின்று விமானத்தில் ஏறுவது போன்ற படத்தை இண்டிகோ தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது. அதில், ராகுல்காந்தியின் வருகைக்கு அந்நிறுவனம் வரவேற்பு தெரிவித்திருந்தது. இந்த படம் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. அரவிந்த் கெஜ்ரிவாலுடன் ஒப்பிட்டு சிலர் கருத்து பதிவிட்டுள்ளனர்.
முன்னதாக கடந்த ஆண்டு பண மதிப்பிழப்பு நடவடிக்கையின் போது ராகுல் காந்தி ஏடிஎம் வாசலில் வரிசையில் நின்ற புகைப்படமும் இதேபோல் வைரலானது குறிப்பிடத்தக்கது.