டிரெண்டிங்
பெண்கள் கழிவறையில் தவறுதலாக நுழைந்த ராகுல் காந்தி
பெண்கள் கழிவறையில் தவறுதலாக நுழைந்த ராகுல் காந்தி
காங்கிரஸ் துணை தலைவர் ராகுல் காந்தி தவறுதலாக பெண்கள் கழிவறைக்குள் நுழைந்த சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
குஜராத் மாநில சட்டசபை தேர்தலுக்காக காங்கிரஸ் கட்சியின் துணை தலைவர் ராகுல் காந்தி சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ளார். இந்நிலையில் சோட்டா உதய்பூரில் பிரசாரம் செய்வதற்காக சென்றிருந்த ராகுல், பொதுக் கூட்டத்தில் பேசிய பிறகு கழிவறைக்கு சென்றார். அப்போது அங்கிருந்த பலகையை கவனிக்காமல் தவறுதலாக பெண்கள் கழிவறைக்குள் அவர் சென்றார்.
தவறை கவனித்த எஸ்பிஜி கமாண்டோக்கள், வேகமாக ஓடி சென்று ராகுலிடம் தெரிவித்தனர். பின்னர் அங்கிருந்து அவர் வேகமாக வெளியேறினார். கவனக்குறைவால் ராகுல் காந்தி பெண்கள் கழிவறையில் நுழைந்த சம்பவம் இணையத்தில் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.