டிரெண்டிங்
புதுச்சேரி மீனவர்களின் குறைகளை கேட்டறிந்த ராகுல் காந்தி!
புதுச்சேரி மீனவர்களின் குறைகளை கேட்டறிந்த ராகுல் காந்தி!
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டு வரும் காங்கிரஸ் எம்.பி ராகுல்காந்தி இன்று புதுச்சேரி, முத்தியால்பேட்டை பகுதியிலுள்ள மீனவர்களிடையே பேசினார்.
அப்போது, ‘’கடலில் செல்லும் மீனவர்களுக்கு காப்புரிமை இருக்கவேண்டும். மேலும் அவர்கள் மீன்பிடிக்க பயன்படுத்தும் உபகரணங்கள் அனைத்தும் நவீனமயமாக்கப்பட்டவையாக இருக்கவேண்டும். அப்போதுதான் அவர்களுடைய வாழ்வாதாரம் சிறப்பாக அமையும்’’ என்று பேசிய ராகுல் மக்களின் கோரிக்கைகளைக் கேட்டறிந்தார்.

