\
ஜிஎஸ்டி, பணமதிப்பு நீக்கத்தால் பொருளாதார முதுகெலும்பு முறிந்தது: ராகுல் குற்றச்சாட்டு

ஜிஎஸ்டி, பணமதிப்பு நீக்கத்தால் பொருளாதார முதுகெலும்பு முறிந்தது: ராகுல் குற்றச்சாட்டு

ஜிஎஸ்டி, பணமதிப்பு நீக்கத்தால் பொருளாதார முதுகெலும்பு முறிந்தது: ராகுல் குற்றச்சாட்டு
Published on

பணமதிப்பு நீக்கம், ஜிஎஸ்டி வரியால் நாட்டின் பொருளாதார முதுகெலும்பு முறிந்து போய் உள்ளது என்று மத்திய அரசு மீது காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி குற்றம்சாட்டியுள்ளார்.

பணமதிப்பு நீக்கம், ஜிஎஸ்டி போன்ற புதிய நடவடிக்கைகள் மூலம் நாட்டில் கருப்பு பணம் ஒழிந்திருப்பதாக பாஜக அரசு கூறி வருகிறது. ஆனால் இந்தப் பிரச்னை சம்பந்தமாக எதிர்கட்சிகள் தொடர்ந்து குற்றம் சுமத்தி வருகின்றன. இந்நிலையில் ராகுல், யார் கருத்தையும் கேட்காமல் பணமதிப்பு நீக்க நடவடிக்கை எடுத்ததாலும், ஜிஎஸ்டியை அமல்படுத்தியதாலும் நாட்டின் பொருளாதார முதுகெலும்பை மோடி அரசு உடைத்து விட்டது என்று கூறியிருக்கிறார்.

குஜராத்தில் தொழில் முனைவோர் மத்தியில் கலந்து கொண்டு பேசிய அவர், ஒவ்வொருவரிடமும் கருத்து கேட்ட பிறகே பெரிய முடிவுகளை காங்கிரஸ் அமல்படுத்தியது. ஆனால், மோடி அரசு யாருடையே பேச்சையும் காது கொடுத்துக் கேட்பதில்லை. நாங்கள் நல்ல பேச்சாளர்களாக இல்லாமல் இருக்கலாம், ஆனால், மக்களின் பேச்சைக் கேட்பவர்கள். பணமதிப்பு நீக்க நடவடிக்கையால் மன்மோகன் சிங் உள்ளிட்ட உலகின் பல பொருளாதார மேதைகள் அதிர்ச்சி அடைந்தனர். பணமதிப்பு நீக்க நடவடிக்கை பற்றி மன்மோகன் சிங்கிடம் நான் தெரிவித்தபோது, அந்த அதிர்ச்சியில் அவரால் உடனடியாக கருத்து கூட கூற முடியவில்லை என்று ராகுல் கூறினார்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com