சென்னை வந்தார் ராகுல் காந்தி - சேலத்தில் இன்று ஸ்டாலின் உடன் ஒரேமேடையில் பரப்புரை

சென்னை வந்தார் ராகுல் காந்தி - சேலத்தில் இன்று ஸ்டாலின் உடன் ஒரேமேடையில் பரப்புரை

சென்னை வந்தார் ராகுல் காந்தி - சேலத்தில் இன்று ஸ்டாலின் உடன் ஒரேமேடையில் பரப்புரை
Published on

காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான ராகுல் காந்தி சட்டமன்றத் தேர்தல் பரப்புரைக்காக சென்னை வந்துள்ளார்.

தமிழகத்தில் தேர்தல் பரப்புரை நிறைவடைய ஒருவாரமே உள்ள நிலையில் தலைவர்களின் பரப்புரை தீவிரமடைந்துள்ளது. இன்று ஒரே மேடையில் திமுக தலைவர் ஸ்டாலின், காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி பிரச்சாரம் மேற்கொள்கின்றனர். இந்த பரப்புரைக்காக ராகுல் காந்தி காலை 11 மணிக்கு சென்னை வந்தடைந்தார்.

விமான நிலையத்தில் கே.எஸ்.அழகிரி, தினேஷ் குண்டுராவ் உள்ளிட்டோர் ராகுலை வரவேற்றனர். இன்றைய பயணத்தின் முதற்கட்டமாக அடையாறில் நடைபெறும் பரப்புரை பொதுக்கூட்டத்தில் ராகுல் காந்தி பங்கேற்கிறார். வேளச்சேரி காங்கிரஸ் வேட்பாளர் ஹசன் மெளலானாவை ஆதரித்து பரப்புரை மேற்கொள்கிறார். பின்னர், பிற்பகல் 3 மணிக்கு சேலம் புறப்பட்டுச் செல்கிறார்.

மாலையில் சேலத்தில் நடைபெறும் தேர்தல் பரப்புரைக் கூட்டத்தில் அவர் பங்கேற்கிறார். இந்தக் கூட்டத்தில் திமுக தலைவர் ஸ்டாலின் உள்ளிட்ட கூட்டணிக் கட்சித் தலைவர்கள் பங்கேற்கின்றனர். இந்த ஆண்டில் ஐந்தாவது முறையாக ராகுல் காந்தி தமிழகம் வருகை தந்துள்ளார்.

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com