\
கேரளாவின் வயநாடு தொகுதியிலும் ராகுல் காந்தி போட்டி!

கேரளாவின் வயநாடு தொகுதியிலும் ராகுல் காந்தி போட்டி!

கேரளாவின் வயநாடு தொகுதியிலும் ராகுல் காந்தி போட்டி!
Published on: 

மக்களவைத் தேர்தலில் அமேதி தவிர, கேரளாவின் வயநாடு தொகுதியிலும் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி போட்டியிடுகிறார். 

வரும் மக்களவைத் தேர்தலில் ராகுல் காந்தி உத்தரபிரதேச மாநிலம் அமேதி தொகுதியில்  போட்டியிடுகிறார். அவர் தென்னிந்தியாவில் போட்டியிட வேண்டும் என்று இங்குள்ள காங்கிரஸ் தரப்பில் வலியுறுத்தப்பட்டது. இதையடுத்து கேரளாவின் வயநாடு தொகுதியில் ராகுல் காந்தி போட்டியிடலாம் என தகவல் வெளியானது. 

இதுபற்றி பேசிய ராகுல் காந்தி, “அமேதி, நான் இருக்கும் இடம். அங்கு என் பணி தொடர்ந்து இருக்கும். கேரளா, கர்நாடகம் மற்றும் தமிழகத்தில் இருந்து 2-வது தொகுதியில் போட்டியிட வேண்டும் என்று காங்கிரஸ் தொண்டர்கள் அழைப்பு விடுத்துள்ளனர். இதற்கு முன்பும் காங்கிரஸ் மற்றும் பிற கட்சியை சேர்ந்த தலைவர்கள் 2 தொகுதிகளில் போட்டியிட்டுள்ளனர். பிரதமர் மோடியும் 2 தொகுதியில் போட்டியிட்டவர். நான் இரண்டாவது தொகுதியில் போட்டியிடுவது தொடர்பாக காங்கிரஸ் கட்சி முடிவு எடுக்கும்” என கூறியிருந்தார்.

இந்நிலையில் அவர் கேரளாவின் வயநாடு தொகுதியில் போட்டியிட விருப்பம் தெரிவித்துள்ளார். இதுபற்றி முன்னாள் அமைச்சரும் அந்தக் கட்சியின் மூத்த தலைவருமான ஏ.கே.அந்தோணி தெரிவித்துள்ளார். 

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com