ராகுல், தீபக் ஹூடா அபார ஆட்டம்! டெல்லிக்கு எதிராக 195 ரன்களை குவித்தது லக்னோ!

ராகுல், தீபக் ஹூடா அபார ஆட்டம்! டெல்லிக்கு எதிராக 195 ரன்களை குவித்தது லக்னோ!
ராகுல், தீபக் ஹூடா அபார ஆட்டம்! டெல்லிக்கு எதிராக 195 ரன்களை குவித்தது லக்னோ!

கே.எல்.ராகுல், தீபக் ஹூடா அபார ஆட்டத்தால் டெல்லி கேப்பிடஸ்க்கு எதிராக 195 ரன்களை குவித்தது லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ்!

மும்பை வான்கடே மைதானத்தில் இன்று நடைபெறும் ஐ.பி.எல். தொடரின் 45வது ஆட்டத்தில் டெல்லி கேபிடல்ஸ் அணியும், லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணியும் மோதுகின்றன. டாஸ் வென்ற லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் கேப்டன் கே.எல்.ராகுல் பேட்டிங்கை தேர்வு செய்தார். அந்த அணி தரப்பில் குயிண்டன் டி காக்கும் கே.எல். ராகுலும் களமிறங்கினர். முதல் பந்திலேயே பவுண்டரி விளாசி அற்புதமாக ஆட்டத்தை துவக்கினார். அதிரடி காட்டி சிக்ஸர், பவுண்டரிகளாக டி காக் ஒருபக்கம் விளாச, மறுபக்கம் ராகுலும் தன் பங்குக்கு பந்துகளை எல்லைக்கோட்டுக்கு பறக்கவிட்டார்.

4வது ஓவரில் ராகுல் கொடுத்த ஒரு கடினமான கேட்ச் வாய்ப்பை லலித் யாதவ் தவறவிட்டார். ஷர்துல் தாகூரின் பந்துவீச்சில் சிக்கி டிகாக் 23 ரன்கள் குவித்த நிலையில் அவுட்டாகி வெளியேறினார். அடுத்ததாக வந்த தீபக் ஹூடா பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த துவங்கினார். கே.எல். ராகுலும் அருமையாக விளையாடியதால் ஸ்கோர் விறுவிறுவென உயரத் துவங்கியது.

பவுலிங்கில் அசத்தி வந்த குல்தீப் யாதவ் வீசிய ஓவரில் இருவரும் தலா ஒரு பவுண்டரிகளை விளாசி அசத்தினர். அதன்பின் டெல்லி பவுலர்களுக்கு இந்த கூட்டணியை பிரிப்பது தலைவலியாக மாறியது. அபாரமாக விளையாடிய இருவரும் ரன் ரேட் 9க்கு குறையாத படி பார்த்துக் கொண்டனர். பொறுப்பாக விளையாடிய ராகுல் 35 பந்துகளில் அரைசதம் கடந்து அசத்தினார்.

மறுபக்கம் தீபக் ஹூடாவும் 32 பந்துகளில் அரைசதம் விளாசினார். அதன்பின் ஷர்துல் பந்துவீச்சில் சிக்கி ஹூடா அவுட்டாக, அடுத்து ஸ்டாய்னிஸ் களமிறங்கி அதிரடியாக ஆடத் துவங்கினார். பவுண்டர்களாக விளாசிய ஸ்டாய்னிஸ் கொடுத்த அருமையான கேட்ச் வாய்ப்பை லலித் யாதவ் தவற விட்டார். அடுத்து ஷர்துல் வீசிய ஓவரில் ராகுல் கொடுத்த கேட்ச் வாய்ப்பை இம்முறை லலித் யாதவ் சரியாக பிடித்தார். 51 பந்துகளில் 77 ரன்கள் குவித்த நிலையில் பெவிலியன் சென்றார் ராகுல்.

இறுதி ஓவர்களில் களமிறங்கிய க்ருனால் பாண்டியா ஸ்டாய்னிஸ் உடன் இணைந்து அதிரடி காட்ட, 20 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட் இழப்பிற்கு 195 ரன்கள் குவித்தது லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ். தற்போது 196 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடின இலக்கை நோக்கி விளையாடி வருகிறது டெல்லி கேப்பிடல்ஸ்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com