முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் இரா.செழியன் உடல்நலக் குறைவால் காலமானார். அவருக்கு வயது 95.
வேலூரில் தனியார் கல்லூரி ஒன்றில் தங்கியிருந்த அவருக்கு முதுமை காரணமாக திடீரென உடல்நலக் குறைவு ஏற்பட்டது. இதனையடுத்து அவர் உயிர் பிரிந்தது. செழியன் 1 முறை மக்களவை உறுப்பினராகவும், 4 முறை மாநிலங்களவை உறுப்பினராகவும் பதவி வகித்துள்ளார். செழியனின் புகழ்மிக்க நாடாளுமன்ற உரைகள் புத்தகங்களாக வெளியிடப்பட்டுள்ளன. அந்த அளவிற்கு இவரின் நாடாளுமன்ற பேச்சுகள் பெருமையாக பேசப்பட்டவை.
நாகப்பட்டினம் மாவட்டம் திருக்கண்ணபுரத்தில் 1923 ஆம் ஆண்டு பிறந்த இவர், நாவலர் நெடுங்செழியனின் இளைய சகோதரர் ஆவர். இரா.செழியனின் மறைவிற்கு பல்வேறு அரசியல் தலைவர்களும் தங்களது இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.

