ஓரிரு நாளில் ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் தேதி!

ஓரிரு நாளில் ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் தேதி!

ஓரிரு நாளில் ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் தேதி!
Published on

சென்னை ஆர் கே நகர் தொகுதி இடைத்தேர்தலுக்கான தேதி குறித்த அறிவிப்பு ஓரிரு நாட்களில் வெளியாகும் என தகவல் வெளியாகியுள்ளது.

ஜெயலலிதா மறைவால் காலியான ஆர் கே நகர் தொகுதிக்கு கடந்த ஏப்ரல் 1‌2 ஆம் தேதி‌ தேர்தல் நடத்தப்படு‌வதாக இருந்தது. ஆனால் வாக்காளர்களுக்கு பணப் பட்டுவாடா செய்யப்பட்டதாக எழுந்த புகாரால், தேர்தல் ரத்து செய்யப்பட்டது. இந்த நிலையில் கடந்த 12 ஆம்‌தேதி, இமாச்சலப் பிரதேச சட்டப்பேரவைத் தேர்தல் தேதி குறித்த அறிவிப்பின் போது, தலைமை தேர்தல் ஆணையர் ஏ.கே.ஜோதி டிசம்பர் 31ஆம் தேதிக்குள் சென்னை ஆர்.கே.நகர் தொகுதியில் இடைத்தேர்தல் நடத்தி முடிக்கப்படும் என தெரிவித்திருந்தார். 
இதன் அடிப்படையில் தேர்தல் தேதி ஓரிரு நாட்களில் அறிவிக்கப்படும் என தகவல் வெளியாகியுள்ளது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com