அப்போலோ அறிக்கைகளில் எழும் கேள்விகள்

அப்போலோ அறிக்கைகளில் எழும் கேள்விகள்

அப்போலோ அறிக்கைகளில் எழும் கேள்விகள்
Published on

ஜெயலலிதா அப்போலோவில் அனுமதிக்கப்பட்டபோது பதிவு செய்யப்பட்ட மருத்துவ அறிக்கையை தற்போது புதிய தலைமுறை வெளியிட்டுள்ள நிலையில், அப்போலோ மருத்துவமனை தரப்பில் இருந்து அவ்வப்போது வெளியிடப்பட்ட அறிக்கைகளில் கேள்விகள் எழுந்துள்ளன. 

கடந்த ஆண்டு செப்டம்பர் 22 ஆம் தேதி இரவு ஜெயலலிதா அப்போலோ மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட நிலையில், 23 ஆம் தேதி அப்போலோ சார்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில், காய்ச்சல் மற்றும் நீர்ச்சத்து குறைபாடு காரணமாக அனுமதிக்கப்பட்டதாகவும், அவரது உடல் நிலை சீராக இருப்பதாகவும் அப்போலோ நிர்வாகம் தெரிவித்தது. ஆனால், புதிய தலைமுறை ஆய்வில் கிடைத்த முதல் மருத்துவ அறிக்கையின்படி, அவரது இதயத்துடிப்பு சராசரியை விட அதிகமாகவும், ஆக்சிஜன் அளவு குறைந்தும், 80 முதல் 120 வரை இருக்கவேண்டிய ரத்தசர்க்கரை அளவு 508 ஆக அசாதாரண நிலையில் இருந்துள்ளது.

செப்டம்பர் 24 ஆம் தேதி அப்போலோ வெளியிட்ட அறிக்கையில் ஜெயலலிதா உடல்நிலை கண்காணிக்கப்பட்டு வருவதாகவும், அவர் வழக்கமான உணவை உட்கொண்டுவருவதாகவும், 25 ஆம் தேதி காய்ச்சல் குறைந்துவிட்டதாகவும் தெரிவிக்க‌ப்பட்டது. 29 ஆம் தேதிதான், ஜெயலலிதா மேலும் சிலநாட்கள் மருத்துவமனையில் தங்கி இருந்து சிகிச்சை பெற வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டது. அதன் பின்னர் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனை மருத்துவர்கள், லண்டன் மருத்துவர் ரிச்சர்ட் பீலே என மருத்துவ நிபுணர்கள் சிகிச்சை அளிக்கத் தொடங்கினர்.

இறுதியாக அப்போலோ மருத்துவமனை நிர்வாகம் வெளியிட்ட அறிக்கையிலும், முதல் நாள் அனுமதிக்கப்பட்டபோது அவருக்கு நிமோனியா இருந்ததோ, சர்க்கரை அளவு அதிகமாக இருந்ததோ குறிப்பிடப்படவில்லை.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com