விபத்தில் உயிரிழந்த புதிய தலைமுறை செய்தியாளர்.. பத்திரிகையாளர் மன்றம் இரங்கல்

ஒளிப்பதிவாளர் சங்கர் குடும்பத்தினருக்கு தமிழ்நாடு அரசு உடனடியாக நிதியுதவி வழங்கி, அவரது குடும்பத்தினரின் வாழ்வாதாரத்துக்கு உறுதுணையாக நிற்க வேண்டும் என சென்னை பத்திரிகையாளர் மன்றம் வலியுறுத்தியுள்ளது.
பத்திரிகையாளார்
பத்திரிகையாளார்PT

விபத்தில் உயிரிழந்த புதிய தலைமுறை தொலைக்காட்சியின் நெல்லை மண்டல ஒளிப்பதிவாளர் சங்கர் இழப்புக்கு கோயமுத்தூர் பத்திரிகையாளர் மன்றம் சென்னை பாத்ரிக்கையாளர் மன்றம் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளது.

முன்னணி செய்தி ஊடகமான புதிய தலைமுறை தொலைக்காட்சியின் நெல்லை மண்டல ஒளிப்பதிவாளராக பணியாற்றுபவர் சங்கர் (32), இவர் சந்திரயான்-3 தொடர்பான செய்தி சேகரிப்புக்காக, செய்திக் குழுவுடன் திருவனந்தபுரம் சென்றிருக்கிறார். பணியை முடித்துவிட்டு அங்கிருந்து மீண்டும் நெல்லை நோக்கி காரில் திரும்பி வந்துள்ளார். நள்ளிரவு ஒரு மணி அளவில் நாங்குநேரி தேசிய நெடுஞ்சாலையிலுள்ள தனியார் மில் அருகே கார் கட்டுப்பாட்டை இழந்து சாலையின் நடுவில் இருந்த தடுப்புச் சுவர் மீது மோதி கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

இதில் காரை ஓட்டி வந்த புதிய தலைமுறை தொலைக்காட்சி ஒளிப்பதிவாளர் சங்கர் (32), படுகாயமடைந்து உயிரிழந்தார், இவருடன் பயணித்த புதிய தலைமுறை செய்தியாளர் நாகராஜன் (45), நியூஸ் 7 ஒளிப்பதிவாளர் வள்ளிநாயகம் (38), மற்றொரு புதிய தலைமுறை ஒளிப்பதிவாளர் நாராயணன் (35) ஆகியோர் படுகாயமடைந்தனர். இவர்கள் மூவரும் சிகிச்சைக்காக நெல்லை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

கோயமுத்தூர் பத்திரிகையாளர் மன்றம் இரங்கல்

செய்தி சேகரித்து பின் வீடு திரும்பும் வழியில் புதிய தலைமுறை நெல்லை மண்டல ஒளிப்பதிவாளர் சங்கர் விபத்தில் சிக்கி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சங்கரை இழந்து தவிக்கும் அவரின் மனைவி, மகள் மற்றும் குடும்பத்தினரின் பரிதாப நிலையை நினைக்கும்போது பெரும் துயரமாகவும், அதிர்ச்சியாகவும் உள்ளது.ஒளிப்பதிவாளர் சங்கரின் இழப்பு கோயமுத்தூர் பத்திரிகையாளர் மன்றத்தை பதற செய்துள்ளது. சங்கர் குடும்பத்தினர். நண்பர்கள், உறவினர்கள், சக பத்திரிகையாளர்கள், புதிய தலைமுறை நிர்வாகத்தினருடன் கோயமுத்தூர் பத்திரிகையாளர் மன்றம் பங்கு கொண்டு ஆழ்ந்த அனுதாபத்தைத் தெறிவிக்கிறோம்.

விபத்தில் அகால மரணமடைந்த சங்கருக்கு, மனைவி, மகள் உள்ளனர். பொருளாதார ரீதியில் பெரும் பின்னடைவில் தத்தளிக்கின்ற சங்கரின் குடும்பத்தினருக்கு தமிழ்நாடு அரசு உதவிக்கரம் நீட்ட வேண்டும். பணியின்போது உயிரிழக்கும் பத்திரிகையாளர்களுக்கான நிதியுதவியை உடனடியாக வழங்க வேண்டும். சங்கரின் மகன் கல்வி செலவை தமிழ்நாடு அரசு முழுமையாக ஏற்க வேண்டும்.

அவரது மனைவியின் கல்வி தகுதிக்கேற்ப வேலைவாய்ப்பை ஏற்படுத்தி தர வேண்டுமென கோயமுத்தூர் பத்திரிகையாளர் மன்றம் வலியுறுத்துகின்றது. மேலும், விபத்தில் காயமடைந்த புதிய தலைமுறை செய்தியாளர் நாகராஜன் (45), நியூஸ் 7 ஒளிப்பதிவாளர் வள்ளிநாயகம் (38), புதிய தலைமுறை ஒளிப்பதிவாளர் நாராயணன் (30) ஆகிய மூவருக்கும் மருத்துவ நிதியுதவி வழங்கவும் கோயமுத்தூர் பத்திரிகையாளர் மன்றம் வலியுறுத்துகின்றது.

சென்னை பத்திரிகையாளர் மன்றம் இரங்கல்

சாலை விபத்தில் உயிரிழந்த புதிய தலைமுறை தொலைக்காட்சி திருநெல்வேலி ஒளிப்பதிவாளர் சங்கர் மறைவுக்கு சென்னை பத்திரிகையாளர் மன்றம் சார்பில் இன்று மாலை சென்னை பத்திரிகையாளர் மன்றத்தில் அஞ்சலி கூட்டம் நடைபெற்றது.

இந்த அஞ்சலி கூட்டத்தில் ஏராளமானோர் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com