வங்கியில் கவரிங் நகைகளை வைத்து ரூ. 12 லட்சம் மோசடி : 2 ஆண்டுகளுக்கு பின் கண்டுபிடிப்பு

வங்கியில் கவரிங் நகைகளை வைத்து ரூ. 12 லட்சம் மோசடி : 2 ஆண்டுகளுக்கு பின் கண்டுபிடிப்பு
வங்கியில் கவரிங் நகைகளை வைத்து ரூ. 12 லட்சம் மோசடி :   2 ஆண்டுகளுக்கு பின் கண்டுபிடிப்பு

வளசரவாக்கம் யூனியன் பேங்க் ஆப் இந்தியாவில் கவரிங் நகைகளை வைத்து ரூபாய் 12 லட்சம் மோசடி செய்தது இரண்டு ஆண்டுகளுக்கு பின்பு கண்டுபிடிக்கப்பட்டது.


சென்னை வளசரவாக்கத்தில் யூனியன் பேங்க் ஆப் இந்தியா வங்கி செயல்பட்டு வருகிறது. இங்கு கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பு நகைகளை அடமானம் வைத்து விட்டு இதுவரை அசல், வட்டி செலுத்தாமலும் நகைகளை மீட்காமல் இருக்கும் நகை உரிமையாளர்களுக்கு நோட்டீஸ் அனுப்பட்டு இதுவரை யாரும் வராததால் அந்த நகைகள் ஏலம் விட முடிவு செய்து நகைகளை மதிப்பீடு செய்தனர்.

 
அப்போது ஆலப்பாக்கத்தை சேர்ந்த சத்தியநாராயணன் 440 கிராம் நகைகளை வைத்து ரூ.8 லட்சமும், ராஜேஸ்வரன் என்பவர் 193 கிராம் நகைகளை வைத்து ரூ.4 லட்சமும் கடன் பெற்றிருந்தனர். அந்த நகைகளை மதிப்பீடு செய்தபோது இருவரும் அடகு வைத்த நகைகள் கவரிங் என தெரியவந்ததையடுத்து அதிர்ச்சி அடைந்தனர்.


இதையடுத்து வங்கி மேலாளர் அபிநயா வளசரவாக்கம் போலீசில் புகார் அளித்ததின் பேரில் வளசரவாக்கம் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர். 2018ஆம் ஆண்டு நகைகளை அடகு வைத்தபோது இருந்த நகை மதிப்பீட்டாளர் மாறி விட்டதால் அவரிடமும் விசாரணை செய்ய போலீசார் முடிவு செய்துள்ளனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com