மீண்டும் சொதப்பிய மும்பை பேட்ஸ்மேன்கள்! பஞ்சாப் வெற்றி பெற 132 ரன்கள் தேவை

மீண்டும் சொதப்பிய மும்பை பேட்ஸ்மேன்கள்! பஞ்சாப் வெற்றி பெற 132 ரன்கள் தேவை

மீண்டும் சொதப்பிய மும்பை பேட்ஸ்மேன்கள்! பஞ்சாப் வெற்றி பெற 132 ரன்கள் தேவை
Published on

சென்னை - சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்று வரும் நடப்பு ஐபிஎல் சீசனின் 17வது லீக் ஆட்டத்தில் மும்பை இன்டியன்ஸ் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகள் விளையாடி வருகின்றன. இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற பாஞ்சாப் கேப்டன் கே.எல்.ராகுல் பந்துவீச்சை தேர்வு செய்தார். அதனால் முதலில் பேட் செய்த மும்பை அணி 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்பிற்கு 131 ரன்களை எடுத்தது. 

மும்பை அணிக்காக கேப்டன் ரோகித் ஷர்மா மற்றும் டி காக் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். தீபக் ஹூடா சுழலில் டி காக் ஷாட் அடிக்க முயன்று அதில் தோல்வியை தழுவினார். தொடர்ந்து வந்த இஷான் கிஷனும் 17 பந்துகளுக்கு 6 ரன்கள் எடுத்த நிலையில் ரவி பிஷோனி சுழலில் சிக்கினார். 

பின்னர் வந்த சூர்யகுமார் யாதவ், ரோகித்துடன் 79 ரன்களுக்கு கூட்டணி அமைத்தார். நிதானமாக விளையாடிய சூர்யகுமார் யாதவ் 27 பந்துகளில் 33 ரன்களை குவித்து அவுட்டானார். அவரது இன்னிங்ஸில் மூன்று பவுண்டரி மற்றும் ஒரு சிக்ஸர் அடங்கும். மறுபக்கம் ரோகித் இந்த சீசனின் முதல் அரைசதத்தை பதிவு செய்திருந்தார். 

தொடர்ந்து பொல்லார்ட் கிரீஸுக்கு வந்தார். ஷமி வீசிய பதினெட்டாவது ஓவரின் மூன்றாவது பந்தில் லோ ஃபுள் டாஸை சிக்சருக்கு கிளியர் செய்ய முயன்று அவுட்டானார். நல்ல அடித்தளம் கிடைத்தும் மீண்டும் டெத் ஓவர்களில் ரன் சேர்க்க தடுமாறியது மும்பை. வழக்காமக டெத் ஓவர்களில் அதிக ரன்களை குவிக்கும் அந்த அணி இந்த சீசன் முழுவதும் அதை செய்ய தவறி வருகிறது. அது இந்த போட்டியிலும் தொடர்கதையாகி உள்ளது. 4 பந்துகளில் 1 ரன் மட்டுமே எடுத்து ஹர்திக், அர்ஷ்தீப் பந்து வீச்சில் விக்கெட்டை இழந்தார். கடைசி ஓவரில் குர்ணால் பாண்ட்யாவும் 3 ரன்கள் மட்டுமே எடுத்து ஷமி வேகத்தில் வீழ்ந்தார். பொல்லார்ட் 12 பந்துகளில் 16 ரன்களை குவித்தார். 

பஞ்சாப் அணி இந்த போட்டியில் வெற்றி பெற 132 ரன்கள் எடுக்க வேண்டும். 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com