\
பஞ்சாப் தேர்தல்: நவ்ஜோத்சிங் சித்து, பகவந்த் மான் வேட்புமனு தாக்கல்

பஞ்சாப் தேர்தல்: நவ்ஜோத்சிங் சித்து, பகவந்த் மான் வேட்புமனு தாக்கல்

பஞ்சாப் தேர்தல்: நவ்ஜோத்சிங் சித்து, பகவந்த் மான் வேட்புமனு தாக்கல்
Published on: 

பஞ்சாப் மாநிலத்தில் ஆம் ஆத்மியின் முதலமைச்சர் வேட்பாளர் பகவந்த் மான், காங்கிரஸ் மாநிலத் தலைவர் நவ்ஜோத் சிங் சித்து உள்ளிட்டோர் வேட்பு மனுத்தாக்கல் செய்துள்ளனர்.

பகவந்த் மான், தூரி தொகுதியில் தனது ஆதரவாளர்களுடன் சென்று வேட்பு மனு தாக்கல் செய்தார். அதேபோல, சித்து அமிர்தசரஸ் கிழக்கு தொகுதியில் வேட்புமனுவை தாக்கல் செய்தார். சித்துவை எதிர்த்து சிரோன்மணி அகாலி தளம் சார்பில், அக்கட்சியின் தலைவர் பக்கிராம் சிங் மஜித்தா போட்டியிடுகிறார்.

இந்த இரு தலைவர்களையும் எதிர்த்து பாஜக சார்பில், டெல்லி தமிழ்நாடு இல்லத்தில் பணியாற்றிய முன்னாள் ஐஏஎஸ் அதிகாரியான ஜக்மோகன் சிங் ராஜு போட்டியிடுகிறார். பஞ்சாபில் பிப்ரவரி 20ஆம் தேதி 117 தொகுதிகளில் ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறுகிறது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com