மக்களுடன் கோலாட்டம் ஆடி வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட அமைச்சர் விஜயபாஸ்கர்

மக்களுடன் கோலாட்டம் ஆடி வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட அமைச்சர் விஜயபாஸ்கர்
மக்களுடன் கோலாட்டம் ஆடி வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட அமைச்சர் விஜயபாஸ்கர்

புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை சட்டப்பேரவைத் தொகுதியில் போட்டியிடும் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் பொதுமக்களுடன் இணைந்து கோலாட்டம் ஆடி வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தனது சொந்தத் தொகுதியான புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை சட்டப்பேரவைத் தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிடுகிறார். இந்நிலையில் நேற்று அவர் இருசக்கர வாகனத்தில் வந்து எளிய முறையில் வேட்பு மனு தாக்கல் செய்த நிலையில், விராலிமலை தொகுதிக்குட்பட்ட பல்வேறு கிராமங்களில் இன்று தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார்.

அதன் ஒரு பகுதியாக இன்று விராலிமலை சட்டப்பேரவைத் தொகுதிக்கு உட்பட்ட பொத்தையம்பட்டி, காசியாபுரம், இடையப்பட்டி, விளாங்காடு, கூவாட்டுப்பட்டி, மாம்பட்டி உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

இதைத் தொடர்ந்து இடையப்பட்டி ஊராட்சிக்குட்பட்ட கரம்பட்டி கிராமத்தில் இன்று அவர் வாக்கு சேகரிக்க சென்றபோது அக்கிராமத்து பொதுமக்கள் கோலாட்டம் ஆடி அவருக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர். இதனைப் பார்த்த சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் கோலாட்டம் ஆடிய பொதுமக்களுடன் இணைந்து அவரும் குச்சிகளைக் கொண்டு கோலாட்டம் அடித்து ஆடியவாறே வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். இந்த சம்பவம் அங்கிருந்த மக்களை வியக்க வைத்தது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com