கொரோனாத் தொற்று அதிகரிப்பு: புதுச்சேரியில் பள்ளிகளை மூட ஆளுநரிடம் பரிந்துரை

கொரோனாத் தொற்று அதிகரிப்பு: புதுச்சேரியில் பள்ளிகளை மூட ஆளுநரிடம் பரிந்துரை
கொரோனாத் தொற்று அதிகரிப்பு: புதுச்சேரியில் பள்ளிகளை மூட ஆளுநரிடம் பரிந்துரை

புதுச்சேரியில் மீண்டும் கொரோனாத் தொற்று அதிகரிப்பதால் பள்ளிகளை தற்காலிகமாக மூட ஆளுநருக்கு சுகாதாரத்துறை பரிந்துரை செய்துள்ளது.

துணைநிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் தலைமையில் கொரோனா தடுப்பூசி தொடர்பான உயர்நிலை கூட்டம் நடைபெற்றது. அந்தக் கூட்டத்தில் புதுச்சேரி சுகாதாரத்துறை இயக்குநர் பல்வேறு பரிந்துரைகளை ஆளுநரிடம் அளித்துள்ளார். அதன்படி, கொரோனா பரிசோதனை, கண்டறிதல் மற்றும் தடுப்பூசி போடுவதை அதிகரிக்க புதுச்சேரி சுகாதாரத்துறை முடிவு செய்துள்ளது.

கொரோனாத் தொற்று அதிகமாக உள்ளதாக அடையாளம் காணப்பட்ட பகுதிகளில் காய்ச்சல் முகாம்களை உருவாக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. எனவே புதுச்சேரியில் பள்ளிகளை தற்காலிகமாக மூட சுகாதாரத்துறை சார்பில் துணைநிலை ஆளுநருக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது. மேலும் புதுச்சேரி பேரவைத் தேர்தல் பரப்புரையில் பங்கேற்பவர்கள், வாக்காளர்கள் அனைவரும் முகக்கவசம் அணியவும் அந்தக் கூட்டத்தில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com