அரசுப்பள்ளி மாணவர்களுக்கு 10 ரூபாய்க்கு HairCut: பட்டதாரி இளைஞருக்கு குவியும் பாராட்டுகள்! #Video

புதுச்சேரியில் வரும் 14 ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்பட உள்ள நிலையில், அரசுப் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு 10 ரூபாய்க்கு முடிவெட்டி விடுகிறார் இளைஞரொருவர். அவரது செயல் அனைவரின் பாராட்டையும் பெற்றுள்ளது.

புதுச்சேரி சாரம் பகுதியைச் சேர்ந்தவர் விஜய். இவர், காமராஜர் சாலையில் சலூன் கடை நடத்தி வருகிறார். பட்டதாரியான விஜய், அரசுப் பள்ளியில் படிக்கும் மாணவர்களின் கஷ்டங்களை புரிந்து கொண்டு, அதை போக்க தன்னாலான முயற்சியை மேற்கொள்ள வேண்டுமென முடிவெடுத்துள்ளார். இதற்காக சமூக வலைதளங்கள் மூலம் விளம்பரமொன்று செய்துள்ளார். அதன்மூலம் நாள்தோறும் தொலைபேசி மூலம் முன்பதிவு செய்யும் 10-க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு, பத்து ரூபாய் கட்டணத்தில் சிகை அலங்காரம் செய்து வருகிறார்.

vijay
vijaypt desk

புதுச்சேரியில் வரும் 14 ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்பட உள்ள நிலையில், தற்போது அங்கு முடிவெட்ட 100 ரூபாய் முதல் 150 ரூபாய் வரை கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இதனால் ஏழை எளிய மாணவர்கள் முடிவெட்ட இயலாமல் சிரமப்படுவர் என்பதை புரிந்து கொண்ட விஜய், 10 ரூபாய் கட்டணத்தில் முடி வெட்டிவிட முடிவெடுத்ததாக சொல்கிறார்.

சமூக வலைதளங்களில் விளம்பரம் செய்து குறைந்த கட்டணத்தில் முடிவெட்டும் பணியை செய்து வரும் அவரை அனைவரும் பாராட்டி வருகின்றனர்.

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com