“மகாராஷ்டிராவில் 3 கட்சிகள் இணைந்து ஒரு வாரத்திற்குள் புதிய ஆட்சி” - புதுவை முதல்வர்

“மகாராஷ்டிராவில் 3 கட்சிகள் இணைந்து ஒரு வாரத்திற்குள் புதிய ஆட்சி” - புதுவை முதல்வர்

“மகாராஷ்டிராவில் 3 கட்சிகள் இணைந்து ஒரு வாரத்திற்குள் புதிய ஆட்சி” - புதுவை முதல்வர்
Published on

மஹாராஷ்டிராவில் காங்கிரஸ், சிவசேனா, தேசியவாத காங்கிரஸ் இணைந்து ஒரு வாரத்தில் கூட்டணி அரசு அமைக்க உள்ளதாக புதுச்சேரி மாநில முதலமைச்சர் நாராய‌ணசாமி தெரிவித்துள்ளார்.

மகாராஷ்டிர மாநிலத்தில் தேர்தல் முடிவு வந்து 19 நாட்கள் ஆகியும் யாரும் ஆட்சி அமைக்காததால் கடந்த 12 ஆம் தேதி முதல் அங்கு குடியரசுத் தலைவர் ஆட்சி அமல்படுத்தப்பட்டது. இதற்கு சிவசேனா உள்ளிட்ட கட்சிகள் கடுமையான விமர்சனத்தை முன்வைத்து வருகின்றனர். குடியரசுத் தலைவர் ஆட்சி குறித்து கருத்து தெரிவித்த உள்துறை அமைச்சர் அமித்ஷா, “இதற்கு முன்பு வேறு எந்த மாநிலத்திலும் மகாராஷ்டிராவிற்கு கொடுத்ததை போல ஆட்சி அமைக்க 18 நாட்கள் கால அவகாசம் வழங்கப்பட்டதில்லை. எந்தக் கட்சியிடம் ஆட்சியமைக்க தேவையான போதிய பெரும்பான்மை உள்ளதோ அந்தக் கட்சி ஆளுநரை அனுகலாம்” எனக் கூறினார். இவரது கருத்தால் மீண்டும் அரசியல் ஆட்டம் மகாராஷ்டிராவில் சூடுப் பிடிக்க தொடங்கியது. 

இந்நிலையில், இன்று நேருவின் பிறந்தநாளையொட்டி புதுச்சேரி கடற்கரை சாலையில் அவரது சிலைக்கு முதலமைச்சர் நாராயணசாமி மாலையணிவித்து மரியாதை செலுத்தினார். தொடர்ந்து அமைச்சர்கள்‌ சட்டமன்ற உறுப்பினர்கள் மரியாதை செலுத்தினர். முன்னதாக, காங்கிரஸ் கட்சியின் தலைமை அலுவலகத்தில் பேசிய நாராயணசாமி, மகாராஷ்டிராவில், காங்கிரஸ், சிவசேனா, தேசியவாத காங்கிரஸ் கட்சிகள் இணைந்து ஒரு வாரத்தில் கூட்டணி ஆட்சி அமைக்க உள்ளதாக தெரிவித்தார். மேலும், சரித்திரம் மாறுகிறது என்றும் மக்கள் தொடர்ந்து ஏமாற மாட்டாகள் எனவும் கூறியுள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com