“புதுக்கோட்டை தொகுதியை மீட்க நோட்டாவுக்கு வாக்கு” - இளைஞர்கள் நூதன பிரச்சாரம்

“புதுக்கோட்டை தொகுதியை மீட்க நோட்டாவுக்கு வாக்கு” - இளைஞர்கள் நூதன பிரச்சாரம்

“புதுக்கோட்டை தொகுதியை மீட்க நோட்டாவுக்கு வாக்கு” - இளைஞர்கள் நூதன பிரச்சாரம்
Published on

புதுக்கோட்டை நாடாளுமன்றத் தொகுதியை மீட்பதற்கு பொதுமக்கள் நோட்டாவிற்கு வாக்களிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி துண்டு பிரசுரங்களை வழங்கி பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டது.

இந்தியாவில் கடந்த 2006 ஆம் ஆண்டு நடந்த தொகுதி மறுசீரமைப்பின் போது, தமிழகத்தில் உள்ள புதுக்கோட்டை நாடாளுமன்றத் தொகுதி நீக்கப்பட்டு புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள 6 சட்டமன்றத் தொகுதிகளை நான்கு மக்களவைத் தொகுதிகளோடு சேர்த்து இணைக்கப்பட்டன. இதனையடுத்து பல்வேறு சமூக அமைப்புகள் மற்றும் இளைஞர்கள் சார்பில் புதுக்கோட்டை தொகுதியை மீட்க குழு தொடங்கப்பட்டது.

இதற்காக கடந்த 2009 மற்றும் 2014ஆம் ஆண்டு நோட்டாவிற்கு வாக்களிப்பதற்கான பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டது. அதன் விளைவாக 2009-ஆம் ஆண்டு நடந்த தேர்தலில் 13,500 வாக்குகளும் 2014ம் ஆண்டு நடந்த தேர்தலில் 50 ஆயிரத்து 600 வாக்குகளும் 49ஓ மற்றும் நோட்டாவிற்கு பொதுமக்கள் வாக்களித்தனர்.

இதனால் தேர்தல் ஆணையம் மட்டுமல்லாது அரசியல் கட்சிகளும் அதிர்ச்சி அடைந்தன. மேலும் இந்த இரண்டு தேர்தல்களில் ஒரு சில அரசியல் கட்சி வேட்பாளர்கள் பொதுமக்கள் நோட்டாவிற்கு வாக்களித்ததால் தங்களுடைய வெற்றி வாய்ப்பை இழக்கும் சூழ்நிலை ஏற்பட்டது.

இந்நிலையில் ஏப்ரல் 18-ஆம் தேதி நடைபெறயுள்ள நாடாளுமன்றத் தேர்தலிலும் புதுக்கோட்டை தொகுதியை மீட்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி பல்வேறு இளைஞர் அமைப்புகள் மற்றும் அகில இந்திய காந்தி பேரவை உள்ளிட்ட அமைப்புகள் பொதுமக்கள் நோட்டாவிற்கு வாக்களிக்க வேண்டும் என்ற பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதற்காக புதுக்கோட்டையில் மக்கள் கூடும் இடங்களில் பொதுமக்கள் நோட்டாவிற்கு வாக்களிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி துண்டு பிரசுரங்கள் வழங்கி வருகின்றனர்.

மேலும் பாரம்பரியமிக்க புதுக்கோட்டை தொகுதியை மீட்டெடுக்கும் வரை நோட்டாவிற்கு பிரச்சாரம் செய்யும் முயற்சியில் நாங்கள் ஈடுபடுவோம் என்றும் இதனால் அரசியல் கட்சி வேட்பாளர்கள் தங்களுடைய வெற்றி வாய்ப்பை இழக்கும் சூழ்நிலையில் ஏற்படும் என்றும் அகில இந்திய காந்தி பேரவை இளைஞர்கள் தெரிவித்தனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com