டிரெண்டிங்
நீட் தேர்வுக்கு எதிராக செப்.16-ல் பொதுக்கூட்டம் - தினகரன் அறிவிப்பு
நீட் தேர்வுக்கு எதிராக செப்.16-ல் பொதுக்கூட்டம் - தினகரன் அறிவிப்பு
நீட் தேர்விலிருந்து தமிழகத்திற்கு விலக்கு அளிக்க மத்திய அரசு அவசரச் சட்டம் இயற்ற வலியுறுத்தி அதிமுக அம்மா அணி சார்பாக வரும் 16ம் தேதி திருச்சியில் பொதுக்கூட்டம் நடைபெறும் என டிடிவி தினகரன் அறிவித்துள்ளார்.
நீட் தேர்வில் இருந்து நிரந்தர விலக்கு அளிக்க வலியுறுத்தி தமிழகம் முழுவதும் மாணவர்கள் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். அதேபோல், பல்வேறு அரசியல் கட்சிகளும் போராட்டங்களை அறிவித்து வருகின்றனர். இந்த நிலையில், டிடிவி தினகரன் சார்பில் பொதுக்கூட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், சமூக நீதியிலும், கல்வி வாய்ப்புகளிலும், தமிழகத்திற்கு உள்ள தனித் தன்மையைக் கருதி நீட் தேர்விலிருந்து நிரந்தர விலக்கு அளிப்பது இன்றியமையாதது எனத் தெரிவித்துள்ளார்.