\
பணப்பட்டுவாடா முறைகேடு - அதிமுக நிர்வாகி வீட்டை முற்றுகையிட்ட பெண்கள் !

பணப்பட்டுவாடா முறைகேடு - அதிமுக நிர்வாகி வீட்டை முற்றுகையிட்ட பெண்கள் !

பணப்பட்டுவாடா முறைகேடு - அதிமுக நிர்வாகி வீட்டை முற்றுகையிட்ட பெண்கள் !
Published on: 

உசிலம்பட்டி அருகே வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா செய்யப்பட்டதில் முறைகேடு செய்த அதிமுக நிர்வாகி வீட்டை பெண்கள் முற்றுகையிட்ட சம்பவம் அரங்கேறியுள்ளது. 

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே தொட்டப்பநாயக்கணூரில் அதிமுக சார்பில் வாக்காளர்களுக்கு ரூபாய் 1000 பணப்பட்டுவாடா செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. இதில் சில பகுதிகளில் பாதி பணத்தை மறைத்து கொண்டு பாதியை (500 ரூபாய்) மட்டுமே வழங்கியுள்ளதாக தெரிகிறது. இதனை அறிந்த பொதுமக்கள் சிலர் ஆத்திரமடைந்து பணப்பட்டுவாடா செய்த அதிமுக கிளைச் செயலாளர் ராஜசேகர் என்பவரின் வீட்டை முற்றுகையிட்டனர். 

முற்றுகையிட்ட பொதுமக்களில் குறிப்பாக பெண்கள் அதிகமானோர் இருந்ததால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. பெண்கள் முற்றுகையிட்டதை கண்ட கிளைச் செயலாளர் ராஜசேகரின் உறவினர்கள் மீண்டும் முழுத்தொகை பட்டுவாடா செய்யப்படும் என உறுதியளித்ததாக தெரிகிறது. இதனையடுத்து அங்கு இருந்தவர்கள் அனைவரும் கலைந்து சென்றனர். இச்சம்பவம் உசிலம்பட்டி பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com