\
ஓபிஎஸ்சை பதவி நீக்கக்கோரி திமுக வழக்கு: மக்களின் கருத்து இதுதான்..!

ஓபிஎஸ்சை பதவி நீக்கக்கோரி திமுக வழக்கு: மக்களின் கருத்து இதுதான்..!

ஓபிஎஸ்சை பதவி நீக்கக்கோரி திமுக வழக்கு: மக்களின் கருத்து இதுதான்..!
Published on: 

தமிழக சட்டப்பேரவையில் கடந்த பிப்ரவரி மாதம் 18-ஆம் தேதி நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பில், முதலமைச்சர் பழனிசாமிக்கு எதிராக வாக்களித்த ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்ட 12 எம்எல்ஏக்களை கட்சித்தாவல் சட்டத்தின் கீழ் தகுதிநீக்கம் செய்யவேண்டும் என திமுக சார்பில் உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

இது குறித்து மக்களின் மனதை அறியும் விதமாக புதிய தலைமுறை இணையதளத்தில் கருத்து கேட்கப்பட்டது. அதற்கு, ஓபிஎஸ் அணியினரை பதவி நீக்கம் செய்யக் கோரி திமுக வழக்குத் தொடர்ந்திருப்பது, ஜனநாயக் கடமை என 68.3 சதவிகித மக்கள் வாக்களித்துள்ளனர். ஆட்சிக் கவிழ்ப்பு முயற்சி என 24.5 சதவிகித மக்களும், தினகரனுக்கு சாதகமான முடிவு என 7.2 சதவிகித மக்களும் வாக்களித்துள்ளனர்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com