\
வியாபாரி எடை இயந்திரத்தைத் தூக்கி வீசிய காவலர் ஆயுதப்படைக்கு மாற்றம்

வியாபாரி எடை இயந்திரத்தைத் தூக்கி வீசிய காவலர் ஆயுதப்படைக்கு மாற்றம்

வியாபாரி எடை இயந்திரத்தைத் தூக்கி வீசிய காவலர் ஆயுதப்படைக்கு மாற்றம்
Published on

விதிமுறைகளை மீறி கடையைத் திறந்து வைத்ததாகக் கூறி, எடை இயந்திரத்தைத் தூக்கி வீசிய காவலர் ஆயுதப்படைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அருகே வெங்கடசமுத்திரம் பகுதியில் தலைமைக் காவலர் ரகுராமன் ரோந்துப் பணியில் ஈடுபட்டுள்ளார். அப்போது அரசின் விதிமுறைகளை மீறி ராஜா என்பவர் கடையைத் திறந்து வைத்ததாகக் கூறி, அவரின் கடையிலிருந்த மின்னணு எடை இயந்திரத்தை வெளியே தூக்கி வீசியுள்ளார்.

இதுதொடர்பான காட்சிகள் வெளியான நிலையில் ரகுராமனை ஆயுதப்படைக்கு மாற்றித் திருப்பத்தூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் விஜயகுமார் உத்தரவிட்டுள்ளார். பின்னர் சம்பவ இடத்திற்கு நேரில் சென்ற எஸ்.பி., பாதிக்கப்பட்ட கடைக்காரருக்கு புதிய எடை இயந்திரத்தை வழங்கினார்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com