\
நிர்வாகி நீக்கத்திற்கு எதிர்ப்பு: டிடிவி தினகரன் உருவ பொம்மை எரிப்பு

நிர்வாகி நீக்கத்திற்கு எதிர்ப்பு: டிடிவி தினகரன் உருவ பொம்மை எரிப்பு

நிர்வாகி நீக்கத்திற்கு எதிர்ப்பு: டிடிவி தினகரன் உருவ பொம்மை எரிப்பு
Published on

திண்டுக்கல் மாவட்ட அதிமுக செயலாளர் நீக்கப்பட்டதை கண்டித்து, டிடிவி தினகரனின் உருவ பொம்மையை எரித்து அதிமுக-வினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

திண்டுக்கல் மாவட்டச் செயலாளராக உள்ள முன்னாள் மேயர் மருதராஜை நீக்கிவிட்டு, தங்கதுரை மற்றும் நல்லசாமி ஆகியோரை டிடிவி தினகரன் நியமித்தார். இதனைக் கண்டித்து எம்ஜிஆர் சிலை முன்பு திரண்ட 100-க்கும் மேற்பட்ட அதிமுக-வினர்,  தினகரனின் உருவப்பொம்மையை எரித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனிடையே, சிவகங்கை மாவட்ட செயலாளர் பொறுப்பில் இருந்து செந்தில்நாதன் எம்.பி.யை நீக்கம் செய்து டிடிவி தினகரன் அறிவித்துள்ளார். மேலும் அப்பொறுப்பில் உமாதேவனை நியமித்துள்ளார். இதேபோல், விழுப்புரம் தெற்கு மாவட்ட செயலாளராக இருந்த குமரகுரு நீக்கப்பட்டு, ஞானமூர்த்தியை நியமிப்பதாக டிடிவி தினகரன் வெளியிட்டுள்ள அறிக்கையில் அறிவித்துள்ளார்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com