\
சொத்துக்குவிப்பு வழக்கை மீண்டும் விசாரிக்க வேண்டும் - சசிகலா

சொத்துக்குவிப்பு வழக்கை மீண்டும் விசாரிக்க வேண்டும் - சசிகலா

சொத்துக்குவிப்பு வழக்கை மீண்டும் விசாரிக்க வேண்டும் - சசிகலா
Published on

சொத்து குவிப்பு வழக்கை மீண்டும் விசாரிக்க வேண்டும் என உச்சநீதிமன்றத்தில் சசிகலா தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

சொத்து குவிப்பு வழக்கில் சசிகலா, அவரது உறவினர் இளவரசி, சுதாகரன் ஆகியோருக்கு வழங்கப்பட்ட 4 வருட சிறை தண்டனையை உச்சநீதிமன்றம் உறுதி செய்தது. இதனையடுத்து அவர்கள் மூன்று பேரும் பெங்களூரு சிறையில் அடைக்கப்பட்டனர். 3 பேரும் தங்கள் மீதான தண்டனையை ரத்து செய்ய வேண்டும் என மறுசீராய்வு மனு தாக்கல் செய்துள்ளனர். இந்த மனு, நீண்ட நாளுக்கு பின்னர் இன்று பிற்பகல் விசாரணைக்கு வருகிறது. இந்நிலையில், சசிகலா தரப்பில் உச்சநீதிமன்றத்தில் சொத்து குவிப்பு வழக்கை நீதிபதி அறையில் விசாரிக்காமல் வழக்கமான நீதிமன்ற வளாகத்தில் மீண்டும் விசாரணை நடத்த வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com