\
அப்துல் கலாம் நினைவு மண்டபத்தை திறந்துவைத்தார் பிரதமர் மோடி

அப்துல் கலாம் நினைவு மண்டபத்தை திறந்துவைத்தார் பிரதமர் மோடி

அப்துல் கலாம் நினைவு மண்டபத்தை திறந்துவைத்தார் பிரதமர் மோடி
Published on

முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாமின் நினைவு மண்டபத்தை பிரதமர் மோடி திறந்துவைத்து பார்வையிட்டார்.

இதையடுத்து கலாமின் வாழ்க்கையை விவரிக்கும் கண்காட்சி பேருந்து பயணத்தையும் அவர் தொடங்கிவைத்தார். இதுதவிர ராமேஸ்வரம் - அயோத்தி இடையே புதிய ரயில் சேவையைத் தொடங்கி வைத்தார்.

மறைந்த முன்னாள் ஜனாதிபதி டாக்டர் அப்துல் கலாமின் 2 ஆம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு, அவரது உடல் அடக்கம் செய்யப்பட்டுள்ள இடத்தில், மத்திய பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பின் சார்பில், 'அப்துல் கலாம் தேசிய நினைவகம்' கட்டப்பட்டுள்ளது. கலாமின் 2 ஆம் நினைவு தினமான இன்று, பிரதமர் நரேந்திர மோடி திறந்துவைத்தார்.

கலாமின் 2 ஆம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு, அவரது வாழ்க்கையைச் சித்திரிக்கும் கண்காட்சி, கலாம் நினைவிடம் அருகே அமைக்கப்பட்டுள்ளது. நிலக்கரி ஓவியம், பென்சில் ஓவியம், காகித ஓவியம் எனப் பல தரப்பட்ட பொருள்களால் கலாமின் உருவம் சித்திரிக்கப்பட்டு, காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com