நிதிஷ் குமார் தனது பீகார் முதல்வர் பதவியை ராஜினாமா செய்துள்ளதற்கு பிரதமர் நரேந்திர மோடி வரவேற்பு தெரிவித்துள்ளார்.
நிதிஷ் ராஜினாமா குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ள மோடி, “பீகார் மக்கள் நேர்மையை வரவேற்கிறார்கள். அரசியல் வேறுபாடுகளை மறந்து ஊழலுக்கு எதிராக அணி திரள்வது நாட்டுக்கு, குறிப்பாக பீகாருக்கு தேவையான ஒன்று. இந்த நேரத்தில் மக்கள் எதிர்பார்ப்பதும் இதுதான்” என்று கூறியுள்ளார்.
தனது அடுத்த ட்வீட் செய்தியில், “ஊழலுக்கு எதிரான போராட்டத்தில் கரம் கோர்த்த நிதிஷ் குமாரை மனதார வாழ்த்துகிறேன். நாட்டின் நூறு மில்லியன் மக்களும் உங்களை வரவேற்று ஆதரிப்பார்கள்” என்று கூறியுள்ளார்.
முன்னதாக, தனது பதவியை ராஜினாமா செய்த நிதிஷ் குமாரிடம் செய்தியாளர்கள், நீங்கள் பாஜகவுடன் சேர்ந்து ஆட்சியை தொடர்வீர்களா என்ற கேள்விக்கு, எந்த பதிலும் சொல்லாமல் அமைதியாக கடந்து சென்றுவிட்டார்.