\
வாரணாசி ரயில்நிலையத்தில் ஆய்வு செய்தார் பிரதமர் மோடி

வாரணாசி ரயில்நிலையத்தில் ஆய்வு செய்தார் பிரதமர் மோடி

வாரணாசி ரயில்நிலையத்தில் ஆய்வு செய்தார் பிரதமர் மோடி
Published on: 

உத்தரபிரதேச மாநிலம் வாரணாசியில் உள்ள ரயில்நிலையத்தில் பிரதமர் மோடி ஆய்வு மேற்கொண்டபோது அங்கு கடைகளில் உள்ள வணிகர்களிடம் கலந்துரையாடினார்.

உத்தரபிரதேச மாநிலத்தில் சட்டமன்றத் தேர்தல் 7 கட்டங்களாக நடைபெற்று வருகிறது. 7ஆம் கட்ட வாக்குப்பதிவு வரும் 7ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில், பிரதமர் மோடி தனது சொந்த தொகுதியான வாரணாசியில் நேற்று வாக்கு சேகரித்தார். பின்னர், வாரணாசியில் உள்ள ரயில் நிலையத்தை நேற்றிரவு மோடி ஆய்வு மேற்கொண்டார்.

அப்போது அங்கிருந்த பயணிகள் பிரதமரைக் கண்டதும் தங்களது செல்போன்களில் புகைப்படம் எடுத்தும் கையசைத்தும் மகிழ்ச்சி தெரிவித்தனர். தொடர்ந்து, ரயில் நிலையத்தில் உள்ள கடைக்காரர்களிடம் பிரதமர் கலந்துரையாடினார்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com