\
நடிகர் அமிதாப் பச்சனுக்கு பிரதமர் மோடி வாழ்த்து

நடிகர் அமிதாப் பச்சனுக்கு பிரதமர் மோடி வாழ்த்து

நடிகர் அமிதாப் பச்சனுக்கு பிரதமர் மோடி வாழ்த்து
Published on

பிரபல பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சன் இன்று தனது 75வது ஆண்டு பிறந்தநாளை கொண்டாடுகிறார். இதையடுத்து பிரதமர் மோடி அவர்கள், அமிதாப்-க்கு தனது ட்விட்டர் பக்கத்தில் வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.

பிரதமர் மோடி அவருடைய ட்விட்டர் பக்கத்தில், சினிமா துறையில் அமிதாப் போன்ற திறமையான ஒருவரை பெற்றதில் இந்தியா பெருமை கொள்கிறது என்றும், பொது நலன்கள் பலவற்றில் ஆதரவு அளித்து வரும் அமிதாப்-க்கு பிறந்தநாள் வாழ்த்துகள் என்று குறிப்பிட்டுள்ளார். மேலும் அவர் நீண்ட காலம் நலமுடன் வாழ பிராத்திக்கிறேன் என்றும் மோடி தன்னுடைய வாழ்த்துகளை பதிவிட்டுள்ளார்.

நடிகர் அமிதாப் பச்சன், மோடியின் தூய்மை இந்தியா திட்டத்தை வரவேற்று மும்பையில் தெருக்களை சுத்தம் செய்யும் பணியில் ஆர்வமாய்  ஈடுப்பட்டது குறிப்பிடத்தக்கது. மேலும் 75வது ஆண்டு பிறந்தநாளை கொண்டாடும் அமிதாப்-க்கு, ரசிகர்கள், பாலிவுட் பிரபலங்கள், நண்பர்கள் ஆகியோர் தங்களுடைய வாழ்த்துகளை தொடர்ந்து தெரிவித்து வருகின்றனர்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com