"புல்வாமா தாக்குதலை நடத்தியவர் மோடி" பிரேமலதாவின் உளறல் பேச்சு

"புல்வாமா தாக்குதலை நடத்தியவர் மோடி" பிரேமலதாவின் உளறல் பேச்சு
"புல்வாமா தாக்குதலை நடத்தியவர் மோடி" பிரேமலதாவின் உளறல் பேச்சு

கோவையில் நடைபெற்ற பரப்புரையின் போது புல்வாமா தாக்குதலை நடத்தியவர் பிரதமர் மோடி என தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் பேசியது சமூக வலைதளங்களில் விமர்சனத்திற்குள்ளானது. 

2011 ஆம் ஆண்டு சட்டப்பேரவை தேர்தலில் கூட்டணி அமைத்து போட்டியிட்ட அதிமுகவும், தேமுதிகவும் 8 ஆண்டுகள் கழித்து மீண்டும் வரும் நாடாளுமன்ற தேர்தலுக்காக கூட்டணி அமைத்துள்ளது. மிக நீண்ட இழுப்பறிக்கு பின்பு அதிமுக கூட்டணியில் தேமுதிக இணைந்தது.  தேமுதிகவுக்கு 4 தொகுதிகள் ஒதுக்கப்பட்டு ஒப்பந்தம் கையெழுத்தானது.

அதன்படி வடசென்னை, கள்ளக்குறிச்சி, விருதுநகர், திருச்சி ஆகிய நான்கு தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. தேர்தல் நெருங்கி வரும் நேரத்தில் அனைத்து கட்சிகளும் தங்களது வேட்பாளர்களுக்கும்ம் கூட்டணி கட்சி வேட்பாளர்களுக்கும் ஆதரவாக பரப்புரை செய்து வருகின்றனர்.

இந்நிலையில் கோவை மக்களவை தொகுதி பாஜக வேட்பாளர் சி.பி.ராதாகிருஷ்ணனை ஆதரித்து கணபதி பேருந்து நிறுத்தம் அருகே தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த்  பரப்புரை மேற்கொண்டார். அப்போது பேசிய அவர் அதிமுக கூட்டணி 40 தொகுதிகளிலும் வெற்றி பெறும் என்றார். 

சி.பி.ராதாகிருஷ்ணன் வெற்றி பெற முரசு சின்னத்திற்கு வாக்களியுங்கள் என தவறுதலாக கூறிய பிரேமலதா பின்னர் தாமரை சின்னத்தில் வாக்களியுங்கள் என தெரிவித்தார். தொடர்ந்து பேசிய அவர் புல்வாமா தாக்குதலுக்கு பதிலடி கொடுத்தவர் பிரதமர் மோடி என்று கூறுவதற்கு பதிலாக புல்வாமா தா‌க்குதலை நடத்தியவர் பிரதமர் என பேசினார். அந்த வீடியோ சமூக வலை தளங்களில் வைரலாக பரவி வருகிறது. 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com