தண்ணீர் பிரச்னையை அரசு உடனடியாக தீர்க்க வேண்டும்: பிரேமலதா விஜயகாந்த்

தண்ணீர் பிரச்னையை அரசு உடனடியாக தீர்க்க வேண்டும்: பிரேமலதா விஜயகாந்த்

தண்ணீர் பிரச்னையை அரசு உடனடியாக தீர்க்க வேண்டும்: பிரேமலதா விஜயகாந்த்
Published on

தண்ணீர் பிரச்னையை தமிழக அரசு உடனடியாக தீர்க்க வேண்டும் என தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து இன்று அவர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், “தண்ணீர் பிரச்னையை தமிழக அரசு உடனடியாக தீர்க்க வேண்டும். இந்த கோடை காலத்தை பயன்படுத்தி ஏரிகளை தூர்வாரி வரப்போகின்ற மழையை சேமிக்க தமிழக அரசு தயாராக இருக்க வேண்டும். நதிநீர் இணைப்பு என்பது தமிழகத்திற்கு மட்டுமல்ல இந்தியாவிற்கே மிக முக்கியமான திட்டம். மோடி பிரதமரானதும் இந்த முறை கண்டிப்பாக நதிநீர் இணைப்பை கொண்டுவர வலியுறுத்துவோம். 

அது வந்துவிட்டால் போதும் தண்ணீர் தேவையை பூர்த்தி செய்து கொள்ள முடியும். நிலத்தடி நீரை உயர்த்தவும் மழைநீரை சேமிக்கவும் திட்டங்கள் வகுக்க வேண்டும் என அரசை வலியுறுத்துவோம். வருங்காலத்தில் இதுபோன்ற நிலைமை இருக்காது. யார் பிரதமராக இருந்தாலும் சரி முதலமைச்சராக இருந்தாலும் சரி தேர்தலின்போது அவர்களது கட்சி சார்பில் பரப்புரையில் ஈடுபடுவது வழக்கமான ஒன்றுதான். 

உள்ளாட்சி தேர்தலை விரைவில் நடத்துவதன்மூலம் தமிழகத்தின் அனைத்து பிரச்னைகளுக்கும் தீர்வு காண முடியும். ஸ்டாலின் சந்திரசேகரராவ் சந்திப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாக நான் பார்க்கவில்லை. சடங்காகவே நான் பார்க்கிறேன்” எனத் தெரிவித்தார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com