நோயாளிகளை சந்திக்க பிரேமலதாவுக்கு அனுமதி மறுப்பு

நோயாளிகளை சந்திக்க பிரேமலதாவுக்கு அனுமதி மறுப்பு

நோயாளிகளை சந்திக்க பிரேமலதாவுக்கு அனுமதி மறுப்பு
Published on

டெங்கு பாதித்த நோயாளிகளை சந்திப்பதற்காக கோவை அரசு மருத்துவமனைக்கு சென்ற பிரேமலதா விஜயகாந்துக்கு அனுமதி மறுக்கப்பட்டது. இதனால் வாக்குவாதம் ஏற்பட்டதை அடுத்து அவருக்கு மீண்டும் அனுமதி வழங்கப்பட்டது.

தேமுதி தலைவர் விஜயகாந்தின் மனைவி பிரேமலதா, டெங்கு பாதித்த நோயாளிகள‌ச் சந்திப்பதற்காக கோவை அரசு மருத்துவமனை நிர்வாகத்தினரிடம் அக்கட்சியினர் நேற்று அனுமதி பெற்றதாக தெரிகிறது. இதையடுத்து இன்று மருத்துவமனைக்குச் சென்ற பிரேமலாதாவுக்கு மருத்துவமனை நிர்வாகத்தினர் தீடீரென மறுப்பு தெரிவித்தனர். இதனால் ஆத்திரமடைந்த தேமுதிகவினர் மருத்துவமனை நிர்வாகத்தினருடனும், காவல்துறையினருடனும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அதன்பின் அனு‌மதி வழங்கப்பட்டதை அடுத்து பிரேமலதா நோயாளிகளைச் சந்தித்து‌ ஆறுதல் கூறினார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய பிரேமலதா, “குப்பைகளை அகற்றுவதற்கோ, சாக்கடைகளை சரிசெய்வதற்கோ மக்கள் தேவைகளை நிறைவேற்றுவதற்கோ யாரும் இல்லாத நிலைமை ஏற்பட்டிருக்கிறது. இதையெல்லாம் கவனிக்க வேண்டிய தமிழக அரசு, எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவை கொண்டாடுவதிலும், தங்கள் பதவிகளை தக்க வைப்பதிலும், அதன் மூலம் சுய லாபம் பார்ப்பதிலும் குறியாக உள்ளனர். மக்கள் பிரச்னைகளில் கவனம் செலுத்த எந்த ஆளுங்கட்சியனரும் தயாராக இல்லை” என குற்றஞ்சாட்டினார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com