\
ராகுல் அளித்த இஃப்தார் விருந்து - சர்ச்சைக்கு பின் பங்கேற்றார் பிரணாப்

ராகுல் அளித்த இஃப்தார் விருந்து - சர்ச்சைக்கு பின் பங்கேற்றார் பிரணாப்

ராகுல் அளித்த இஃப்தார் விருந்து - சர்ச்சைக்கு பின் பங்கேற்றார் பிரணாப்
Published on

புதுடெல்லி தாஜ் பேலஸ் ஓட்டலில் காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி இஃப்தார் விருந்து அளித்தார். இந்த விருந்தில் காங்கிரஸ் மூத்த தலைவர்கள், முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், முன்னாள் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி, துணை குடியரசுத் தலைவர் அமீது அன்சாரி, பிரதீபா பாட்டீல், உள்ளிட்ட தலைவர்கள் கலந்து கொண்டனர். அதேபோல், சரத் யாதவ், சீதாராம் யெச்சூரி, தினேஷ் திரிவேதி(திரிணாமூல்), கனிமொழி, ப.சிதம்பரம் உள்ளிட்ட எதிர்க்கட்சி தலைவர்கள் பலரும் கலந்து கொண்டனர்.

ஆர்.எஸ்.எஸ் ஏற்பாடு செய்த நிகழ்ச்சியில் பிரணாப் முகர்ஜி கலந்து கொண்டது சர்ச்சையை ஏற்படுத்தியது. இதனால், இஃப்தார் நோன்பு நிகழ்ச்சியில் பிரணாப் கலந்து கொள்ள மாட்டர் என்று செய்திகள் வெளியானது. ஆனால், காங்கிரஸ் தலைவர்களுடன் பிரணாப் முகர்ஜியும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். 

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com