நான் இந்துக்களுக்கு எதிரானவன் அல்ல; மோடிக்கு எதிரானவன்: பிரகாஷ் ராஜ்

நான் இந்துக்களுக்கு எதிரானவன் அல்ல; மோடிக்கு எதிரானவன்: பிரகாஷ் ராஜ்

நான் இந்துக்களுக்கு எதிரானவன் அல்ல; மோடிக்கு எதிரானவன்: பிரகாஷ் ராஜ்
Published on

தான் இந்து மதத்துக்கு எதிரானவன் அல்ல, மோடிக்கு எதிரானவன் என நடிகர் பிரகாஷ் ராஜ் தெரிவித்துள்ளார்.

இந்தியா டுடே நிகழ்ச்சியில் பேசிய பிரகாஷ் ராஜ், “எந்தப் திரைப்படமும் இந்துக்களுக்கு எதிரானது இல்லை. ஆனால் அது இந்துக்களுக்கு எதிராக சித்தரிக்கப்படுகிறது. கடந்த சில நாட்களுக்கு முன் பாஜகவை சேர்ந்த ஒருவர் என்னை இந்துக்கு எதிரானவர் என்று கூறினார். நான் இந்து மதத்திற்கு எதிரானவன் அல்ல. மோடிக்கு எதிரானவன். அமித்ஷாவுக்கு எதிரானவன். என்னை இந்துக்களுக்கு எதிரானவன் எனக்கூறும் அவர்கள் இந்துக்களே இல்லை” என்று கூறினார்.

இந்நிகழ்ச்சியில் பங்கேற்ற ஒருவர் எழுந்து, யார் இந்து என நீங்கள் எவ்வாறு கூற முடியும் என்றார். அந்த கேள்விக்கு பதிலளித்த பிரகாஷ் ராஜ்,“ நான் இந்துக்கு எதிரானவன் என அவர்கள் எப்படி கூற முடியும் என்று கேள்வி எழுப்பினார். பிறரை கொலை செய்பவர்களுக்கு இந்துக்கள் உட்பட யாரும் ஆதரவு தருவதில்லை” என்றும் கூறினார். இதனால் அரங்கில் சற்று சலசலப்பு ஏற்பட்டது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com