“குதிரை பேரத்திற்கு பெயர் போனது காங்கிரஸ்தான்” - பிரகாஷ் ஜவடேகர்
100 கோடி ரூபாய் மற்றும் அமைச்சர் பதவி தருவதாக பாஜக ஆசை காட்டுகிறது என்ற மதசார்பற்ற ஜனதா தளத் தலைவர் குமாரசாமியின் குற்றச்சாட்டுக்கு பிரகாஷ் ஜவடேகர் மறுப்பு தெரிவித்துள்ளார்.
கர்நாடகாவில் செய்தியாளர்களிடம் பேசிய ஜவடேகர், “காங்கிரசுடன் இணைந்து ஆட்சியமைப்பதை மதச் சார்பற்ற ஜனதா தள எம்எல்ஏக்களில் பலர் விரும்பவில்லை. இது இயற்கைக்கு மாறானது எனக் கருதுகிறார்கள். இந்நிலையில் ஆட்சியமைக்க ஜனநாயக நடைமுறைகளை பின்பற்றி நடவடிக்கைகள் எடுத்து வருகிறோம். இதன்படி கர்நாடகாவில் நாங்கள் நிச்சயம் ஆட்சி அமைப்போம்
காங்கிரஸ்தான் பின்வாசல் வழியாக ஆட்சியைப் பிடிக்க பார்க்கிறது. சட்டத்தில் இல்லாத எல்லாவற்றையும் அவர்கள் முயற்சிக்கிறார்கள். ஆதரமற்ற குற்றச்சாட்டுகளை எங்கள் மீது கூறுகிறார்கள். ரூ100 கோடி பேரம் என்பது கற்பனையான குற்றச்சாட்டு. குதிரைபேரம் உள்ளிட்ட எந்தச் செயலிலும் நாங்கள் ஈடுபடவில்லை” என்று கூறியுள்ளார்.