விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு பானை சின்னம் ஒதுக்கீடு

விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு பானை சின்னம் ஒதுக்கீடு

விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு பானை சின்னம் ஒதுக்கீடு
Published on

திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு தேர்தல் ஆணையம் பானை சின்னத்தை ஒதுக்கியுள்ளது.

வரும் சட்டப்பேரவை தேர்தலில் திமுக கூட்டணியில் விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு 6 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. அதன்படி காட்டுமன்னார் கோவில் - சிந்தனை செல்வன், வானூர் - வன்னியரசு, நாகை - ஆளூர் ஷா நவாஸ், செய்யூர் - பனையூர் பாபு, திருப்போரூர் - எஸ்.எஸ்.பாலாஜி, அரக்கோணம் - கவுதம சன்னா ஆகியோர் விசிக சாரில் வேட்பாளர்களாக களமிறக்கப்பட்டுள்ளனர்.

இதைத்தொடர்ந்து விடுதலை சிறுத்தைகள் கட்சி தனிச்சின்னத்தில்தான் போட்டியிடும் என அக்கட்சியின் தலைவர் திருமாவளவன் ஏற்கெனவே தெரிவித்திருந்தார். அதன்படி தற்போது விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு பானை சின்னத்தை தேர்தல் ஆணையம் ஒதுக்கீடு செய்துள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com