\
சென்னை மாநகராட்சி - பெண்களுக்கு 50% இடஒதுக்கீட்டை எதிர்த்த வழக்கு தள்ளிவைப்பு

சென்னை மாநகராட்சி - பெண்களுக்கு 50% இடஒதுக்கீட்டை எதிர்த்த வழக்கு தள்ளிவைப்பு

சென்னை மாநகராட்சி - பெண்களுக்கு 50% இடஒதுக்கீட்டை எதிர்த்த வழக்கு தள்ளிவைப்பு
Published on

சென்னை மாநகராட்சி தேர்தலில், பெண்களுக்கு வார்டு ஒதுக்கீடு செய்த உத்தரவை எதிர்த்த வழக்கின் தீர்ப்பை சென்னை உயர் நீதிமன்றம் தேதி குறிப்பிடாமல் தள்ளிவைத்துள்ளது.

சென்னையில் சில மண்டலங்களில் பெண்களுக்கு 50 சதவீத இட ஒதுக்கீடு வழங்கப்படவில்லை என்றும், சில மண்டலங்களில் 50 சதவீதத்துக்கு அதிகமான வார்டுகள் ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் கூறி, சென்னை சூளைமேட்டை சேர்ந்த முத்துராஜ் என்பவர் வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்த போது, 2018 ஆம் ஆண்டு வார்டு மறுவரையறை அறிவிப்பு வெளியிட்ட நிலையில், தேர்தல் அறிவித்த பிறகு வழக்கு தொடரப்பட்டுள்ளதாக தமிழக அரசின் சார்பில் தெரிவிக்கப்பட்டது. அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் தள்ளிவைத்தனர்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com