\
திமுகவின் கொள்கை பரப்புச் செயலாளர் ஆனார் தங்க தமிழ்ச்செல்வன்

திமுகவின் கொள்கை பரப்புச் செயலாளர் ஆனார் தங்க தமிழ்ச்செல்வன்

திமுகவின் கொள்கை பரப்புச் செயலாளர் ஆனார் தங்க தமிழ்ச்செல்வன்
Published on

திமுகவின் கொள்கை பரப்புச் செயலாளராக தங்க தமிழ்ச்செல்வன் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

திருச்சி சிவா, ஆ.ராசாவுடன் இணைந்து தங்க தமிழ்ச்செல்வனும் கொள்கை பரப்புச் செயலாளராக செயல்படுவார் என திமுக பொதுச் செயலாளர் அன்பழகன் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

இதேபோல திமுகவின் இலக்கிய அணி இணைச் செயலாளராக வி.பி.கலைராஜன் நியமிக்கப்பட்டுள்ளார். தங்க தமிழ்ச்செல்வன் மற்றும் வி.வி.கலைராஜன் ஆகியோர் அமமுகவில் இருந்து விலகி சமீபத்தில் திமுகவில் இணைந்தது குறிப்பிடத்தக்கது. இதேபோல பொள்ளாச்சியை சேர்ந்த கே.எம்.நாகராஜன் திமுக நெசவாளர் அணி செயலாளராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com